Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மாருதி எஸ் பிரெஸ்ஸோ பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

by automobiletamilan
September 21, 2019
in கார் செய்திகள்

maruti s-presso teased

ரெனோ க்விட் காருக்கு நேரடியான போட்டியாக மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ (Maruti S-Presso) மைக்ரோ எஸ்யூவி கார் செப்டம்பர் 30 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் விலையை தவிர என்ஜின், வசதிகள் மற்றும் வேரியண்ட் விபரம் அனைத்தும் வெளியாகிவிட்டது.

இந்த காரின் டிசைனை என்பது ஆல்ட்டோ கே10 மாடலை விட மிகவும் ஸ்டைலிஷாகவும் அதே வேளை இந்நிறுவனத்தின் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் மினியேச்சர் தோற்றத்துக்கு இணையாகவே விளங்க உள்ளது. ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் மாடலை பின்பற்றி பெரும்பாலான தோற்ற அம்சத்தை கேரிஓவராக பெற்றுள்ள இந்த எஸ்யூவி காரின் முகப்பு அமைப்பு மிகப்பெரிய காராக வெளிப்படுத்துவதற்கு ஏற்ற கிரில் அமைப்பு மற்றும் முன்புற பம்பரை கொண்டுள்ளது. மேலும், விட்டாரா பிரெஸ்ஸா காரில் உள்ளதைப் போன்ற முன்புற கிரிலை கொண்டதாக வரவுள்ளது. பாக்ஸ் வடிவத்தை கொண்ட ஹெட்லைட், எல்இடி ரன்னிங் விளக்குகள், மற்றும் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கினை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

எஸ்-பிரஸ்ஸோ காரில், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் K10B 1.0 லிட்டர் பொருத்தப்பட்டு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக விளங்கும். 50 கிலோவாட் (67.98 பிஎஸ்) அதிகபட்ச சக்தியை 5,500 ஆர்பிஎம் மற்றும் 90 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-ல் வழங்கும். இந்த மாடலில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்படும்.

இன்டிரியரில், முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்டில் உள்ளதை போன்றே அமைப்பினை வெளிப்படுத்தலாம். டார்க் கிரே நிறத்திலான டேஸ்போர்டின் மத்தியில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியா வசதியுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்றவற்றை கொண்டிருக்கலாம். பேஸ் வேரியண்டில் ஸ்மார்ட்பிளே டாக் ஆடியோ சிஸ்டம் ப்ளூடூத் ஆதரவை கொண்டிருக்கும்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ

இந்த காரில்  STD (O), LXi, LXi (O), VXi, VXi (O), VXi +, VXi AGS, VXi (O) AGS, மற்றும் VXi+ AGS மொத்தமாக 9 விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது. 3,565 மிமீ நீளம், 1,520 மிமீ அகலம் மற்றும் 1,564 மிமீ உயரம் கொண்டது. ரெனால்ட் க்விட் உடன் ஒப்பிடுகையில், இது 114 மிமீ குறைந்த நீளம், 59 மிமீ அகலம் குறைவாக மற்றும் 86 மிமீ கூடுதல் உயரம் கொண்டது. இது 42 மிமீ குறுகிய வீல்பேஸைக் கொண்டுள்ளது, எஸ் பிரெஸ்ஸோவின் வீல்பேஸ் 2,380 மிமீ ஆகும். மேலும் இந்த காரில் 165/70 அளவைப் பெற்று குறைந்த வேரியண்டில் 13 அங்குல வீல் மற்றும் டாப் வேரியண்டில் 14 அங்குல வீலை கொண்டிருக்கும். சாதாரன வீல் மட்டும் அனைத்து வேரியண்டிலும் கிடைக்க உள்ளது.

பொதுவாக அனைத்து வேரியண்டிலும் இந்திய சந்தையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டாய பாதுகாப்பு வசதிகளான ஓட்டுநர் ஏர்பேக், ஏபிஎஸ்,  ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது. கூடுதலாக உடன் பயணிப்பவருக்கான ஏர்பேக் என்பது ஆப்ஷனல் வேரியண்டில் மட்டும் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு சார்ந்த கூடுதல் வசதிகள் பேஸ் வேரியண்டில் ஆப்ஷனலாக மட்டுமே வழங்கப்படுகின்றது.

மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ

image source – autocarindia

ஆல்ட்டோ K10 மற்றும் வேகன் ஆர் இடையில் நிலைநிறுத்தப்பட உள்ள புதிய மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ காரின் விலை ரூ.3.80 லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்குள் நிறைவடை வாய்ப்புகள் உள்ளது. இந்த காருக்கு போட்டியாக ரெனோ க்விட், டட்சன் ரெடிகோ, மஹிந்திரா கேயூவி100 உள்ளிட்ட எதிர்கொள்ள உள்ளது.

Tags: Maruti SuzukiMaruti Suzuki S-pressoமாருதி எஸ்-பிரெஸ்ஸோமாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ
Previous Post

ரூ.38,000 முதல் ஆரம்பம் 6 எலக்ட்ரிக் ஸ்மார்ட் பைக்குகளை வெளியிட்ட போலாரிட்டி

Next Post

ஸ்டைலிஷான புதிய ரெனோ க்விட் கார் படங்கள் வெளியானது

Next Post

ஸ்டைலிஷான புதிய ரெனோ க்விட் கார் படங்கள் வெளியானது

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version