Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

6 சீட்டர் பெற்ற மாருதி சுசுகியின் எர்டிகா கார் அறிமுக விவரம்

by automobiletamilan
July 11, 2019
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

ertiga

வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம், 6 சீட்டர் பெற்ற ஸ்டைலிஷான பிரீமியம் எம்பிவி ரக எர்டிகா காரை விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த கார் மாடல் எர்டிகா அடிப்படையில் தயாரிக்கப்படிருக்கும்.

மூன்று வரிசை இருக்கை பெற உள்ள இந்த காரில் இரண்டு கேப்டன் இருக்கைகளை இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாதாரன எர்டிகா காரை விட மிகவும் ஸ்டைலிஷான மற்றும் முரட்டு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்க உள்ள இந்த காரில் மிக நேர்த்தியான புராஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், பாடி கிளாடிங் உள்ளிட்ட வசதிகளுடன் வரவுள்ளது.

இன்டிரியரில் பல்வேறு புதிய வசதிகளை பெற்றிருக்கும். குறிப்பாக கருப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட டேஸ்போர்டில் மாருதி ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருப்பதுடன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக அமைந்திருக்கும்.

Maruti Ertiga Cross

இந்த காரில்  பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது. மாருதியின் நெக்ஸா ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ள புதிய மாடலின் பெயர் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.

Tags: Maruti Suzukiமாருதி எர்டிகாமாருதி சுசுகி
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan