• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஆகஸ்ட் 21-ல் வரவுள்ள மாருதியின் XL6 காருக்கான முன்பதிவு துவங்கியது

by MR.Durai
9 August 2019, 5:55 pm
in Car News
0
ShareTweetSend

மாருதி சுஸுகி XL6

மாருதி சுஸுகி நிறுவனத்தின், அடுத்த எம்பிவி ரக மாடலாக புதிய மாருதி சுஸுகி XL6  மாடல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் இந்த காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு முன்பதிவுக்கு ரூபாய் 11 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

எர்டிகா எம்பிவி ரக மாடலை விட கூடுதலான பிரீமியம் வசதிகளை பெற்று 6 இருக்கை கொண்ட மாடலாக வெளிவரவுள்ள எக்ஸ்எல் 6 காரின் நீளம் எர்டிகாவை விட 50 மிமீ அதிகரிக்கப்பட்டிருந்தாலும் வீல்பேஸ் அதிகரிக்கப்படவில்லை.

மாருதியின் நெக்ஸா ஷோரூம்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஆல்பா மற்றும் ஜெட்டா என இரு வேரியண்டுகளை பெற்றதாகவும், மூன்று வரிசை இருக்கை பெற உள்ள எக்ஸ்எல் 6 காரில் இரண்டு கேப்டன் இருக்கைகளை இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளில் கொண்டிருக்கும். சாதாரண எர்டிகா காரை விட மிகவும் ஸ்டைலிஷான மற்றும் முரட்டு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்க உள்ள XL6 காரில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், பாடி கிளாடிங் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்படுவதனால் காரின் தோற்றம் கவனத்தைப் பெறுகின்றது.

கருமை முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இன்டிரியரில் மாருதியின் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருப்பதுடன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக அமைந்திருக்கும். கூடுதலாக இந்த காரில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, லெதர் இருக்கைகள், மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றை பெற்றிருக்கும்.

மாருதியின் XL6 காரில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைபிரிட் SHVS பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 4 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் 5 மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.

Tags: Maruti SuzukiMaruti Suzuki XL6
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version