Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மாருதி பலேனோ, ஸ்விஃப்ட் கார்கள் திரும்ப அழைப்பு : பிரேக் பிரச்சனை

by automobiletamilan
May 8, 2018
in கார் செய்திகள்

இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், தங்களுடைய புதிய சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி பலேனோ ஆகிய கார்களில் ஏற்பட்டுள்ள பிரேக் பிரச்சனையின் காரணமாக 52,686 கார்களைத் திரும்பப் பெறுவதாக அதிகர்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாருதி பலேனோ, ஸ்விஃப்ட்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற பிரபலமான மாருதி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி பலேனோ கார்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுடைய பிரேக் வெற்றிட குழாயை (brake vacuum hose) மாற்றி தரும் நோக்கில் பிரத்தியேகமாக திரும்பப் பெறுவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 1, 2017 முதல் மார்ச் 16, 2018 வரை உற்பத்தி செய்யப்பட்ட பலனோ மற்றும் ஸ்விஃப்ட் ரக மாடல்களில் சுமார் 52,686 எண்ணிக்கையில் பிரேக் பிரச்சனை ஏற்பட்டடுள்ளதால் மே 14ந் தேதி முதல் டீலர்கள் வாயிலாக திரும்ப அழைக்கப்பட்டு முற்றிலும் இலவசமாக மாற்றித் தரப்பட உள்ளது.

உங்களுடைய கார் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிய அருகாமையில் உள்ள டீலரை தொடர்பு கொள்ளலாம் அல்லது இந்நிறுவனத்தின் நெக்ஸா இணையதளத்தில் பிரத்தியேக பக்கத்தில் வாகனத்தின் சேஸ் எண்ணை கொண்டு அறிந்து கொள்ளலாம்.

உங்கள் வாகனத்தின் சேஸ் நெம்பரை கொண்டு இந்த இணைப்பில் அறிந்து கொள்ளலாம் — https://apps.marutisuzuki.com/information1.aspx

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ மாடல் கார்கள் திரும்பப் பெறுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, கடந்த மே 2016-ம் ஆண்டு ஏறத்தாழ 75,419 கார்களை, ஏர்பேக் பிரச்சனை இருப்பதாகக் கூறி அவற்றைத் திரும்பப் பெற்றது. இந்த 75,419 பலேனா ரக கார்களில் 15,995 கார்கள், ஆகஸ்ட் 2015 – மார்ச் 2016-ம் ஆண்டின் இடையே தயாரிக்கப்பட்ட டீசல் வகை கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Brake issueMaruti SuzukiMaruti Swiftசுஸூகி ஸ்விஃப்ட்பிரேக் பிரச்சனைமாருதி பலேனோ
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version