இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், தனது பிரபலமான பிரெஸ்ஸா எஸ்யூவி ரக மாடலில் ஏஎம்டி கிய்பாக்ஸை இணைத்து மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி மாடலை ரூ.8.54 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி

காம்பேக்ட் எஸ்யூவி ரக சந்தையில் பிரசத்தி பெற்று விளங்கும் மாருதி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் டீசல் எஞ்சினை அடிப்படையாக கொண்டு நான்கு விதமான வேரியன்டில் ஏஜிஎஸ் எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்ட் அதாவது ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் இடம்பெற்றுள்ளது.

விற்பனையில் 1.3 லிட்டர் DDiS டீசல் எஞ்சனில் எந்த மாற்றங்களும் இல்லாமல், 90 ஹெச்பி ஆற்றல் மற்றும் 200 என்எம் இழுவைத் திறனை கொண்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் கூடுதலாக ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் அடிப்பையாக ஏபிஎஸ், டூயல் ஏர்பேக், ஐஎஸ்ஓஃபிக்ஸ் குழந்தைகள் இருக்கை இடம்பெற்றுள்ளது.

புதிதாக வந்துள்ள ஏஎம்டி மாடலில் புதிதாக வெள்ளை நிற மேற்கூறையுடன் ஆரஞ்சு நிறம் பெற்றுள்ளது. கருப்பு நிற பூச்சை பெற்ற அலாய் வீல், க்ரோம் பூச்சை பெற்ற கிரில், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்றவற்றுடன் , இன்டிரியரில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நீல நிறுத்துடன் கூடிய வெள்ளை மேற்கூறை பெற்ற நிறம் நீக்கப்பட்டுள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி விலை பட்டியல்

VDi AGS – ரூ. 8.54 லட்சம்

ZDi AGS – ரூ. 9.31 லட்சம்

ZDi+ AGS – ரூ. 10.27  லட்சம்

ZDi+ Dual Tone AGS – ரூ. 10.49 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)