மெர்சிடிஸ்-ஏ.எம்.ஜி

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சக்தி வாய்ந்த 416 HP குதிரைத்திறனை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை தயாரித்துள்ளது. 4 சிலிண்டர் பெற்ற மாடல்களில் உலகின் அதிக சக்தி வாய்ந்த என்ஜினாக M139 விளங்க உள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் பயணிகள் கார் தயாரிப்பு பிரிவின் பெர்ஃபாமென்ஸ் ரக ஏஎம்ஜி மாடல்களில் 2.0 லிட்டர் M139 டர்போ பெட்ரோல் என்ஜின் இரு விதமான பவரை வெளிப்படுத்தும் வகையில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

மெர்சிடிஸ்-ஏ.எம்.ஜி

முந்தைய M133 என்ஜினுக்கு முற்றிலும் மாற்றாக வெளியிடப்பட்டுள்ள புதிய M139 என்ஜினை பெறும் முதல் காராக மெர்சிடிஸ் ஏஎம்ஜி A 45, CLA 45 மற்றும் GLA 45  போன்ற மாடல்கள் பெற உள்ளன.

இரு விதமான பவர் நிலையை பெற்றுள்ள இந்த என்ஜினின் அதிகபட்ச பவரை வெளிப்படுத்தும் என்ஜின் டாப் S  வேரியன்டுகள் மட்டும் பெற வாய்ப்புகள் உள்ளது. 7,200rpm சுழற்சியில் அதிகபட்சமாக 382 HP குதிரைத்திறன் மற்றும் 480Nm டார்க் வெளிப்படுத்தும்.

அடுத்தப்படியாக அதிகபட்ச பவரைவ வெளிப்படுத்துகின்ற மாடலில் 7,200rpm சுழற்சியில் அதிகபட்சமாக 416 HP குதிரைத்திறன் மற்றும் 480Nm டார்க் வெளிப்படுத்தும். பொதுவாக இந்த என்ஜின் 8 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் உடன் வரவுள்ளது.

மெர்சிடிஸ்-ஏ.எம்.ஜி m139

வருகின்ற ஜூலை மாதம் முதன்முறையாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள மெர்சிடிஸ்-ஏ.எம்.ஜி ஏ45 காரில் இடம்பெற உள்ளது.