நவீனத்துவமான டெக் வசதிகளை பெற்ற எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஆஸ்டர் எஸ்யூவி காரின் அறிமுக விலை ரூ.9.78 லட்சம் முதல் ரூ.16.78 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முதல் 5,000 கார்களுக்கு மட்டும் இந்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்டரில் 110 ஹெச்பி பவர் மற்றும் 150 என்எம், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும், சக்திவாய்ந்த 140 ஹெச்பி பவர் மற்றும் 220 என்எம், 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.
காரின் இன்டிரியரில் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஸ்டெப் டாஷ், பிரஷ் செய்யப்பட்ட மெட்டல் எஸ்க்யூ அலங்கார டிரிம் டாஷ்போர்டு மற்றும் கதவு பேனல்கள் மற்றும் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி உடன் 3 விதமான டேஸ்போர்ட் தீமை பெற்று டூயல் டோனில் சாங்ரியா ரெட், ஐகானிக் ஐவரி மற்றும் டக்ஸிடோ பிளாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.
இந்த காரில் நவீனத்துவமான Level-2 ADAS (Advanced Driver Assistance Systems) சிஸ்டத்தை அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம்ஸ் பிரிவில் நெடுந்தொலைவு பயணத்தில் உதவுகின்ற ஆடாப்ட்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அல்ட்ராசோனிக் சென்சாரின் உதவியுடன் செயல்படும் தானியங்கி பார்க்கிங் அசிஸ்ட், முன்புற மோதலை தடுக்கம் வசதி, ஆட்டோமேட்டிக் அவசர பிரேக்கிங் வசதி, பிளைன்ட் ஸ்பாட் அறிதல் மற்றும் லேன் மாறுவதனை கேமரா உதவியுடன் எச்சரிக்கும் லேன் வார்னிங் வசதியும் உள்ளது.
MG Astor price
Powertrain | Style | Super | Smart | Sharp |
---|---|---|---|---|
1.5-litre VTi-Tech MT | Rs. 9,78,000/- | Rs. 11,28,000/- | Rs. 12,98,000/- | Rs. 13,98,000/- |
1.5-litre VTi-tech CVT | – | Rs. 12,68,000/- | Rs. 14,18,000/- | Rs. 14,98,000/- |
1.3-litre 220 Turbo AT | – | – | Rs. 15,88,000/- | Rs. 16,78,000/- |
Prices are introductory and ex-showroom, India
ADAS வசதியை பெற்ற வேரியண்டின் விலை தற்போது அறிவிக்கப்படவில்லை.