₹ 7.98 லட்சம் முதல் அதிகபட்சமாக ₹ 9.98 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள எம்ஜி காமெட் EV காரின் அறிமுக சலுகை விலை முதல் 5,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
முன்பதிவு மே 15 ஆம் தேதி துவங்கும் நிலையில் மே 22 முதல் டெலிவரி துவங்கப்பட உள்ளது. முதல் 5,000 வாடிக்கையார்களுக்கு மட்டுமே தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள விலை அதன்பிறகு கணிசமாக விலை உயர்த்தப்பட உள்ளது. எலக்ட்ரிக் காருக்கு வாரண்டி மற்றும் (BuyBack) திரும்ப வாங்கிக் கொள்ளும் விரங்களை வெளியிட்டுள்ளது.
MG Comet Electric Car
காமெட் EV காரில் பேஸ், ப்ளே மற்றும் ப்ளஷ் என மூன்று வகைகளில் கிடைக்கிறது. பொதுவாக வாரண்டி உட்பட பேட்டரி, ரேஞ்சு போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. மற்றபடி சில வசதிகளில் குறிப்பாக டிஜிட்டல் கிளஸ்ட்டர் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றில் மட்டும் மாறுதல்கள் மற்றும் சில வசதிகள் குறைந்த வேரியண்ட்களில் இருக்காது.
காமெட் காரின் மோட்டார் அதிகபட்சமாக பவர் 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் பெற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், கூடுதல் ரேஞ்சு வழங்கும் மாடல் சற்று தாமதமாக அறிமுகம் செய்யப்படலாம்.
3.3 kW சார்ஜர் வாயிலாக 10 முதல் 80% சார்ஜ் பெற 5 மணிநேரமும், 0 முதல் 100% சார்ஜ் பெற 7 மணிநேரமும் தேவைப்படும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 230 கிமீ தொலைவு பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் அனைத்து வேரியண்டிலும் IP67 பேட்டரி பேக், டூயல் ஏர்பேக், ABS + EBD, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார், ஃபாலோ மீ ஹெட்லேம்ப், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் மற்றும் பின்புற இருக்கை பெல்ட் நினைவூட்டல், டிரைவர் & கோ-டிரைவர் சீட் லோட் லிமிட்டர் போன்றவை உள்ளன.
MG Comet EV Price List
Variant | Price (ex-showroom) |
MG Comet EV Pace | Rs 7.98 lakh |
MG Comet EV Play | Rs 9.28 lakh |
MG Comet EV Plush | Rs 9.98 lakh |
(முதல் 5000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் )
எம்ஜி மோட்டார் நிறுவனம் இலவச லேபர் சார்ஜ், 3 ஆண்டுகள் RSA (சாலையோர உதவி), 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ வாகனத்திற்கு உத்தரவாதம் மற்றும் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.2 லட்சம் கிமீ உத்தரவாதம் வழங்கப்படுகின்றது.
காமெட் காருக்கு இ-ஷீல்டின் கீழ் 80+ நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் சேவை தொகுப்புகளின் தொகுப்புகளை வாங்குபவர்கள் தேர்வு செய்யலாம். மிக முக்கியமாக 3 வருட பைபேக் திட்டமாகும். அங்கு எம்ஜி நிறுவன எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் 60% பணத்தை திரும்ப பெறும் உத்தரவாதம் அளிக்கிறது.