இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பிரபலமான எஸ்யூவி காரான எம்ஜி ஹெக்டரில் கூடுதலாக டூயல் டோன் பெற்ற மாடல் விற்பனைக்கு ரூ.16.84 லட்சம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் ஷார்ப் அடிப்படையில் மட்டும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டர் காரை விற்பனைக்கு வெளியிட்ட முதல் வருடத்தை கொண்டாடும் வகையில் ஆனிவர்சரி எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இப்போது டூயல் டோன் மாடல் சாதரன ஒற்றை நிற வேரியண்டை விட ரூ.20,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.

5 ஒற்றை நிற வேரியண்டை தொடர்ந்து கேன்டி வெள்ளை நிறத்துடன் ஸ்டேர்ரி பிளாக் மற்றும் கிளேஸ் ரெட் உடன் ஸ்டேர்ரி பிளாக் என இரண்டு நிறங்களை கொண்டுள்ளது. இந்த நிறத்தில் ஏ பில்லர் மற்றும் ஓஆர்விஎம் கருப்பு நிறத்தை கொண்டுள்ளது.

143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.

ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.

ஷார்ப் வேரியண்டில் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுவதில்லை. எனவே, ஹைபிரிட் மேனுவல், டிசிடி மற்றும் டீசல் மேனுவல் வேரியண்டில் மட்டும் வரவுள்ளது.

எம்ஜி ஹெக்டர் டூயல் டோன் விலை பட்டியல்

1.5 petrol-hybrid MT – ரூ. 16.84 லட்சம்

1.5 petrol DCT – ரூ. 17.76 லட்சம்

2.0 diesel MT – ரூ. 18.09 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் இந்தியா)

விரைவில், எம்ஜி நிறுவனம் குளோஸ்டர் எஸ்யூவி கார் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.