இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள எம்ஜி ஹெக்டர் (MG Hector) எஸ்யூவி விலை ரூ.12.18 லட்சம் முதல் ரூ.16.88 லட்சத்தில் நிறைவடைகிறது. ஹெக்டர் காரின் பெட்ரோல் மாடலில் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது விற்பனைக்கு வந்துள்ள முதல் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி பாடி அமைப்பினை பெற்ற ஹெக்டரில் வழங்கப்பட்டுள்ள ஐஸ்மார்ட் என்ற பெயரில் உள்ள கனெக்ட்டிவிட்டி வசதியின் மூலம் பல்வேறு இணையம் சார்ந்த அம்சங்களை பெறும் முதல் 20 லட்சம் ரூபாய்க்கு குறைவான காராக விளங்குகின்றது.
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விலை மற்றும் என்ஜின் விவரம்
இன்டர்நெட் இன்சைடு என்ற டேக்லைன் பெற்ற ஹெக்டரின் நீளம் 4,655 மிமீ, 1835 மிமீ அகலம்,1760 மிமீ உயரம் மற்றும் 2750 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 192 மிமீ ஆகும். இந்த மாடலின் பூட்ஸ்பேஸ் 587 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது.
எல்இடி ரன்னிங் விளக்குகள், புராஜெக்டர் ஹெட்லைட் உடன் கூடியதாக உள்ள இந்த மாடலின் முன்புற கிரில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டதாக விங்கும் இந்த மாடலில் கருப்பு, சில்வர், வெள்ளை, கிளாஸ் ரெட் மற்றும் சிவப்பு என மொத்தமாக 5 நிறங்களிலும் வந்துள்ளது.
5 இருக்கைகளை கொண்ட இன்டிரியரில் மிகவும் தாராளமாக இடவசதி வழங்கப்பட்டு டேஸ்போர்டில் செங்குத்தான நிலையில் 10.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஐஸ்மார்ட் எனப்படும் கனெக்ட்டிவிட்டி வசதிகள் பெற்றதாக உள்ளது.
ஹெக்டர் என்ஜின் விவரம்
எஸ்யூவி ரக எம்.ஜி. ஹெக்டர் மாடலில் வழங்கபட்டுள்ள பெட்ரோல், ஹைபிரிட் பெட்ரோல் மற்றும் டீசல் என மொத்தமாக மூன்று என்ஜின் ஆப்ஷன் பெற்றுள்ளது. 143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது.
கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.
ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.
பிரிவு | ஹெக்டர் பெட்ரோல் | ஹெக்டர் டீசல் |
என்ஜின் | 1.5 லிட்டர், டர்போ பெட்ரோல் | 2.0 லிட்டர் டர்போ டீசல் |
குதிரைத்திறன் | 143hp | 170hp |
டார்க் | 250Nm | 350Nm |
கியர்பாக்ஸ் | 6-speed MT/6-speed dual-clutch AT | 6-speed MT |
48V mild-hybrid | ஆப்ஷன் | – |
மைலேஜ் | லிட்டருக்கு 14.16 கிமீ/13.96 கிமீ AT | லிட்டருக்கு 17.41 கிமீ |
எம்ஜி ஹெக்டர் எஸ்யுவி பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்), ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் வேரியன்ட் மைலேஜ் லிட்டருக்கு 15.91 கிமீ ஆகும்.
எம்ஜி மோட்டாரின் ஹெக்டர் டீசல் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.41 கிமீ ஆகும்.
ஹெக்டரின் முக்கிய விபரங்கள்
ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் என நான்கு வேரியன்டுகளில் மொத்தமாக 13 வகையான மாறுபாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் வந்துள்ளது.
எம்ஜி ஹெக்டர் பெட்ரோல் மாடலின் செலவு ஒவ்வொரு கிமீ 0.45 பைசா எனவும், டீசல் மாடலின் செலவு ஒவ்வொரு கிமீ-க்கு 0.49 பைசா என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி காருக்கு 5 வருட வாரண்டி அல்லது வரம்பற்ற கிலோமீட்டர், 5 வருட இலவச ரோடு சைட் அசிஸ்டன்ஸ், 5 இலவச சர்வீஸ் வழங்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் 120 டீலர்கள் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் எம்ஜி மோட்டார் டீலர்கள் சென்னை, கோவை மற்றும் மதுரை நகரங்களில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 250 டீலர்கள் துவங்கப்பட உள்ளது.
எம்ஜி ஹெக்டர் விலை பட்டியல்
விற்பனைக்கு முன்பாக 10,000 அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ள எம்ஜி ஹெக்டர் அறிமுக விலை ரூ.12.18 லட்சம் ஆகும்.
MG Hector SUV image Gallery