எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை கொண்ட சிறிய எலெக்ட்ரிக் காருக்கு எம்ஜி காமெட் (MG Comet EV) என்ற பெயரை உறுதிப்படுத்தியுள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலை வரவுள்ள காமெட் ரேஞ்சு 200 கிமீ முதல் 300 கிமீ க்குள் அமைந்திருக்கலாம்.

தமிழில் ‘வால்மீன்’ என பொருள்படும் காமெட் என்ற பெயர், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மேக்ராபர்ட்சன் விமானப் பந்தயத்தில் பங்கேற்ற 1934 ஆம் ஆண்டின் சின்னமான பிரிட்டிஷ் விமானத்தின் பெயரை நினைவுப்படுத்துவதாகும்.

MG மோட்டார் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா கூறுகையில்,  “எம்.ஜி. ‘காமெட்’ மூலம், சிறப்பான தீர்வுகளை உருவாக்கும் வகையில் தேவையான தீர்க்கமான ‘நம்பிக்கையின் பாய்ச்சலை’ எடுக்க விரும்புகிறோம். நம் ஒவ்வொருவருக்கும்  சிறந்த எதிர்காலத்திற்கான மாடலாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

MG Comet EV

இந்தோனேசியாவில் விற்பனை செய்யப்படுகின்ற Wuling Air EV மாடலை அடிப்படையாகக் கொண்டது. காமெட் பேட்டரி கார் மொத்த நீளம் 2.9 மீட்டர் மற்றும் 2.01 மீட்டர் வீல்பேஸ் கொண்டிருக்கின்றது. இரண்டு கதவுகளை மட்டும் பெற்றுள்ள இந்த மாடலில் இரட்டை 10.25 இன்ச் டிஸ்ப்ளே சேர்க்கப்பட்டு கனெக்ட்டிங் அம்சங்களுடன் வரவுள்ளது.

காமெட் EV காரில் சுமார் 20-25kWh திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி உள்நாட்டில் டாடா AutoComp நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட உள்ளது. மேலும், மாடல் 200 முதல் 300 கிமீ வரையிலான ரேஞ்சை கொடுக்கும் என தகவ்கள் தெரிவிக்கின்றது. மோட்டார் அதிகபட்சமாக 50kW (68hp) பவர் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி காமெட் நடப்பு 2023 ஆம் ஆண்டின் மத்தியில் சந்தைக்கு விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.