10,000 ZS EV விற்பனை இலக்கை கடந்த எம்ஜி மோட்டர்

2d335 mg zs mg zs ev suv

இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் அறிமுகம் செய்த தனது முதல் ZS EV கார் முதல் 10,000 விற்பனை எண்ணிக்கை கடந்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற இரண்டாவது எலக்ட்ரிக் கார் மாடலாகும்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட ZS EV  காரின் விலை ரூ.21.99 லட்சம்  முதல் ரூ. 25.88 லட்சம் வரை கிடைக்கின்றது.

2023 MG ZS EV

ZS EV மின்சார காரில்  பெரிய 50.3kWh பேட்டரி பேக்குடன் வந்துள்ளது. இதன் பெரிய பேட்டரியின் காரணமாக 461km (ICAT சோதனையின் படி) பெற்றுள்ளது.  அதிகபட்சமாக 176hp பவர் மற்றும் 353Nm டார்க் வழங்குகின்ற மின்சார மோட்டார் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதாவது முந்தைய மாடலின் 143hp பவர் 33hp வரை அதிகரித்துள்ளது. 8.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தில் புதிய ZS EV எட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய எல்இடி பகல் நேர ரன்னிங் லேம்ப் விளக்குகளுடன் கூடிய மெலிதான ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டெயில்-லேம்ப்ஸ போன்றவை ஆஸ்டரை காரில் உள்ளதைப் போலவே உள்ளன.

மேலும் படிக்க – எம்ஜி காமெட் எலக்ட்ரிக் கார் விலை & சிறப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *