ஜனவரி 23.., எம்ஜி ZS EV மின்சார காரின் விலை வெளியீடு

a719b zs ev suv

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது மாடாலாக வெளியிடப்பட உள்ள மின்சார கார் ZS EV மிக சிறப்பான ரேஞ்சு மற்றும் இணையம் சார்ந்த வசதிகளை வழங்குகின்றது. ஜனவரி 23 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்த எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில், ஜனவரி 17 ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவு பெற்றது. முதற்கட்டமாக இசட்எஸ் இ.வி. கார் டெல்லி, பெங்களூரு, ஹைத்திராபாத், மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் கிடைக்க உள்ளது.

44.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் கூடிய மின்சார மோட்டார் அதிகபட்சமாக 143 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், அதிகபட்சமாக 340 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 8.5 விநாடிகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காருக்கு இணை விருப்பமாக 7.4 கிலோ வாட் சார்ஜர் வழங்குவதுடன் 15 ஆம்பியர் வீட்டு சார்ஜரலிலும் சார்ஜ் செய்யலாம். இந்த பேட்டரியை 7 kW AC சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும் போது அதிகபட்சமாக 7 மணி நேரமும், 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 40 நிமிடங்களில் மேற்கொள்ளும் திறனை கொண்டிருக்கும்.

ரூ. 22 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற ZS EV உரிமையாளர்களுக்கு 5 ஆண்டு / வரம்பற்ற கிமீ உற்பத்தியாளர் உத்தரவாதம், லித்தியம் அயன் பேட்டரிக்கு 8 ஆண்டு / 1,50,000 கிமீ உத்தரவாதமும் இலவசமாக வழங்கப்படும். இஷீல்ட் 5 வருட காலத்திற்கு 24×7 சாலையோர உதவிகளையும் (ஆர்எஸ்ஏ) உள்ளடக்கியது. தனி நபர் பயன்பாட்டுக்கு வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *