அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ நடத்திய அமெரிக்காவை சேர்ந்த மான்ஸ்டர் டிரக் சங்கம், அடுத்த ஆண்டு இதை இந்தியாவுக்கு கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த ஸ்டார்லைட் 108 மீடியா இந்தியாவில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த ஷோவில், 12 அடி உயரம், 20 அடி நீளம் மற்றும் 5 அடி உயர டயர்கள் கொண்ட வாகனங்கள் காட்சி படுத்தப்பட உள்ளன. மேலும் இந்த வாகனங்களின் எடை 4500kg கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக இந்த இந்தியாவில் ஷோ மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நான்கு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, மற்ற நகரங்களில் நடத்தப்படும்.
இதுமட்டுமின்றி இந்த ஷோவை ஆசிய நாடுகள் முழுமைக்கும் கொண்டு செல்ல ஸ்டார்லைட் 108 மீடியா திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த் ஷோ குறித்து மால், ஸ்கூல் மற்றும் காலேஜ்களில் பிரபலப்டுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஷோ குறித்த முழு தகவல்கள் வரும் 2019ம் ஆண்டின் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.