Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

அறிமுகமானது புதிய தலைமுறை ஹோண்டா பிரயோ

by automobiletamilan
August 3, 2018
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

இந்தோனேசியாவில் நடந்த GIIAS 2018 (Gaikindo Indonesia International Auto Show-வில் ஹோண்டா நிறுவனம், புதிய தலைமுறைக்கான பிரயோ கார்களை அறிமுகம் செய்தது. புதிய ஹோண்டா பிரயோ, ஹோண்டா சிறிய RS கான்செப்ட் போன்றே இருந்ததால், அதிகமாகவர்களை கவர்ந்தது. ஹோண்டா சிறிய RS கான்செப்ட் இந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில் இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. இதுமட்டுமின்றி இந்த காரை ஹோண்டா அமாஸ்- காருடன் ஒப்பிடும் போது, பல்வேறு ஒற்றுமைகளை கொண்டுள்ளது. இந்த புதிய தலைமுறை மாடல்கள் இந்தாண்டின் இறுதியில் அல்லது 2019ம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய மார்க்கெட்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், ஹோண்டா அமாஸ் மற்றும் புதியதாக வெளியே வர உள்ள ஹோண்டா பிரயோ இரண்டும் இன்ஜின் மற்றும் உள் அலங்காரம் போன்றவற்றில் ஒரே பிளாட்பார்மை பகரிந்து கொண்டுள்ளன. பிரயோ-வின் வெளிப்புறத்தில் இடம் பெற்றுள்ள பிராண்ட் கிரில் மற்றும் ஹெட்லேம்ஸ் ஆகியவும் அமாஸ்-சில் உள்ளதை போலவே தோற்றமளிக்கிறது. மேலும், இரண்டாம் தலைமுறை ப்ரியோ அதன் முன்னோடிகளிடமிருந்து உத்வேகம் பெறுகிறது. இது முன்புற பம்பர்கள், டோர் ஹான்டில்கள், சைட் சாப்டர் லைன், வெளிப்புறத்தில் ரியர் வியூ கண்ணாடிகள் ORVMs (Outside Rear View Mirror) போன்றவற்றை பார்க்கும் போது வெளிப்படையாக தெரிகிறது.

கேபின் உள்புறத்தில், புதிய ஹோண்டா பிரயோ ஸ்போர்ட்ஸ் ஸ்டைல் மற்றும் பிரீமியம் அம்சங்களுடன் இணைந்து அமைப்பை கொண்டுள்ளது. சென்டர் கன்சோலில் இடம்பெற்றுள்ள டச்ஸ்கிரின் இன்போடென்மென்ட் சிஸ்டம் கேபினுக்கு மேலும் அழகூட்டும் வகையில் அமைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட சீட்கள் சிறந்த மெட்டிரீயல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் அழகை அதிகரிக்க செய்கிறது. இது ஏராளமான இடம் மற்றும் வசதியையும் வழங்கும். வாடிக்கையாளர்களை ஈர்க்ககூடிய வகையிலான பாதுகாப்பு அம்சங்கள் இந்த மாடல்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்ஜினை பொறுத்த வரையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் அதே இன்ஜினையே இந்த காரிலும் பயன்படுத்தப்படுகிறது. இருந்தபோதும் இந்தியாவில் வெளியாக உள்ள பிரயோ-வின் குறித்த விபர குறிப்புகளை ஹோண்டா இதுவரை வெளியிடவில்லை. டிரான்ஸ்மிஷன் ஆப்சன்கள் 5 ஸ்பீட் மெனுவல் கையேடு கியர்பாக்ஸ் மற்றும் CVT (continuously variable transmission) ஆகியவை அடங்கியதாக இருக்கும்.

Tags: Honda BrioNew GenerationUnveiledபுதிய தலைமுறைஹோண்டா பிரயோ
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan