ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் 2024 அல்கசார் எஸ்யூவி மாடல் ADAS பாதுகாப்பு தொகுப்பு, புதிய டிசைன் பெற்று ஆறு மற்றும் ஏழு இருக்கைகளுடன் ரூபாய் 14.99 லட்சத்தில் துவங்குகின்றது. டீசல் மாடல் ரூ.15.99 லட்சத்திலும் துவங்குகின்றது.
2024 Hyundai Alcazar
பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான ஆப்ஷனை பெற்று மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு விதமான வகையில் பிளாட்டினம், சிக்னேச்சர், எக்ஸ்க்யூடிவ் மற்றும் பிரஸ்டீஜ் என என நான்கு விதமான வேரியண்டுகளின் அடிப்படையில் கிடைக்கின்றது.
1.5 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 160PS பவர் மற்றும் 253Nm வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT கியர் பாக்ஸ் ஆனது இடம் பெற்று இருக்கின்றது.
அல்கசார் பெட்ரோல் மைலேஜ் 17.65Kmpl (மேனுவல்) மற்றும் 18Kmpl (DCT) ஆகும்.
அடுத்ததாக, 1.5 லிட்டர் U2 CRDi டீசல் எஞ்சின் 116PS பவர் மற்றும் 250NM டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது.
அல்கசார் டீசல் மைலேஜ் 20.4Kmpl (மேனுவல்) மற்றும் 18.1Kmpl (ஆட்டோ) ஆகும்.
பல்வேறு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் Snow, Mud மற்றும் Sand என மூன்று ட்ராக்சன் மோடுகள் மற்றும் Normal, Eco, மற்றும் Sports என்ற ரைடிங் மோடுகளையும் கொண்டு இருக்கின்றது.
Alcazar நுட்பவிபரங்கள்
நீளம்xஅகலம்xஉயரம் | (4560 X 1800 X 1710) மிமீ | |
வீல்பேஸ் | 2760 mm | |
எஞ்சின் | 1.5L U2 CRDi | 1.5L TGDi |
எரிபொருள் | டீசல் | பெட்ரோல் |
பவர் (kW/Bhp) | 117.5 kW (160 PS) | 85 kW (116 PS) |
டார்க் (NM) | 250 Nm | 253 Nm |
டிரான்ஸ்மிஷன் | 6-Speed MT/ 6-Speed AT | 6-Speed MT/ 7-Speed DCT |
மைலேஜ் | MT- 20.4 km/l AT- 18.1 km/l | MT- 17.75 km/l DCT- 18.0km/l |
ஹூண்டாய் அல்கசார் டிசைன்
கிரெட்டா காரின் இன்ஸ்பிரேஷனில் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற புதிய அல்கசாரின் முன்பக்கத்தில் H-வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் நான்கு பீம்களை கொண்ட எல்இடி ஹெட்லைட் ஆனது கொடுக்கப்பட்டு மிக நேர்த்தியான ஸ்கிட் பிளேட் மற்றும் கருப்பு நிறத்திலான க்ரோம் கிரில் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
பக்கவாட்டில் 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல் கொண்டிருக்கின்ற இந்த மாடலானது மிக நேர்த்தியான தோற்ற அமைப்பினை முந்தைய மாடல் போலவே தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.
புதுப்பிக்கப்பட்ட பின்புறத்தில் புதிய எல்இடி லைட் பார் கொடுக்கப்பட்டு டிசைன் ஆனது மாற்றப்பட்டுள்ளது மேலும் ஸ்டாப் லைட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு இருக்கின்றது ஒட்டுமொத்தத்தில் அல்கசார் எஸ்யூவி காரின் தோற்ற அமைப்பானது மிக நேர்த்தியாகவும் கம்பீரமாகவும் இருக்கும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.
எமரால்டு மேட், டைட்டன் கிரே மேட், எமரால்டு, ஸ்டாரி நைட்,
ரேஞ்சர் காக்கி, ஃபியரி ரெட், அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட் மற்றும் ஒற்றை டூயல்-டோன் வண்ணத்தில் கருப்பு கூரையுடன் அட்லஸ் வெள்ளை என மொத்தமாக அல்கசாரில் 9 நிறங்கள் உள்ளன.
ஹூண்டாய் அல்கசார் இன்டீரியர்
க்ரெட்டா காரில் தற்பொழுது உள்ள இன்டிரியர் அமைப்பும் அல்கசார் எஸ்யூவி பெற்றாலும் பல்வேறு டிசைன் மாற்றங்கள் கூடுதலான வசதிகளை கொண்டிருக்கிறது. ஆறு மற்றும் ஏழு இருக்கைகளைக் கொண்டிருக்கின்ற இந்த மாடலை பொருத்தவரை எட்டு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் மற்றும் உடன் பயணிப்பவர்களுக்கான இருக்கை வசதியானது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
முதன்முறையாக டிஜிட்டல் கீ (Digital key with NFC) கொடுக்கப்பட்டு மூன்று நபர்கள் ஒரே சமயத்தில் ஏழு விதமான கருவிகள் வரை கனெக்ட் செய்யும் வகையிலும் இதன் மூலம் இலகுவாக வண்டியை இயக்குவதற்கு ஏற்ற வகையில் அம்சத்தை கொண்டிருக்கின்றது.
ஹூண்டாய் ப்ளூ லிங்க் கனெக்ட்டிவிட்டி டெக்னாலஜி மூலம் சுமார் 70-க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் அம்சங்கள் பெற்று டிஜிட்டல் கிளஸ்டர் 10.25 அங்குலமாக கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஜியோ சாவான் உள்ளிட்ட பல்வேறு இசை சார்ந்த அம்சங்களும் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்களையும் பெறலாம்.
தொடைப் பகுதிக்கான Thigh சப்போர்ட், டூயல் ஜோன் ஆட்டோமேட்டிக் கண்ட்ரோல், போஸ் பீரிமியம் நிறுவன 8 ஸ்பீக்கர்கள், பனரோமிக் சன்ரூஃப், காற்றோட்டமான 2வது வரிசை இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர் பின்புற இருக்கைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.
ஹூண்டாய் அல்கசார் பாதுகாப்பு வசதிகள்
அல்கசார் எஸ்யூவி காரில் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இந்நிறுவனம் 70 பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை இணைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் அடிப்படையாகவே இந்த மாடல் 6 ஏர் பேக்குகளுடன் ஹீல் ஹோல்டு ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், வெய்கிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், கொண்டிருக்கின்றது.
ஹூண்டாய் SmartSense லெவல் 2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுகின்ற டாப் வேரியண்டுகளில் ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் உட்பட பிளைன்ட் வியூ மானிட்டர் முன்புற மோதலை தடுக்கும் எச்சரிக்கும் அமைப்பு லேண்ட் கீப்பிங் அசிஸ்ட் டிரைவர் அட்டென்ஷன் வார்னிங் என 19 ADAS சார்ந்த பாதுகாப்பினை கொண்டிருக்கின்றது.
மற்றபடி சில குறிப்பிடத்தக்க அம்சங்களில் சரவூண்ட் வியூ மானிட்டர் டயர் பிரசர் மானிட்டர் டிஜிட்டல் கீ, ரெயின் சென்சிங் வைப்பர், முன்புற பார்க்கிங் சென்சார் ஆகிய அம்சங்களும் இடம் பெற்று இருக்கின்றது.
2024 Hyundai Alcazar Price List
2024 ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி ஆரம்ப விலை ரூபாய் 14.99 லட்சம் முதல் ரூபாய் 21.54 லட்சம் வரை அமைந்துள்ளது.
Variant | Prices |
---|---|
1.5 l Turbo GDi Petrol MT Executive 7 Seater | ₹ 14 99 000 |
1.5 l Turbo GDi Petrol MT Executive 7 Seater Matte | ₹ 15 14 000 |
1.5 l Turbo GDi Petrol MT Prestige 7 Seater | ₹ 17 17 900 |
1.5 l Turbo GDi Petrol MT Prestige 7 Seater Matte | ₹ 17 32 900 |
1.5 l Turbo GDi Petrol MT Platinum 7 Seater | ₹ 19 45 900 |
1.5 l Turbo GDi Petrol MT Platinum 7 Seater DT Matte | ₹ 19 60 900 |
1.5 l Turbo GDi Petrol DCT Platinum 7 Seater | ₹ 20 90 900 |
1.5 l Turbo GDi Petrol DCT Platinum 6 Seater | ₹ 20 99 900 |
1.5 l Turbo GDi Petrol DCT Platinum 7 Seater DT Matte | ₹ 21 05 900 |
1.5 l Turbo GDi Petrol DCT Platinum 6 Seater DT Matte | ₹ 21 14 900 |
1.5 l Turbo GDi Petrol DCT Signature 7 Seater | ₹ 21 19 900 |
1.5 l Turbo GDi Petrol DCT Signature 7 Seater DT Matte | ₹ 21 34 900 |
1.5 l Turbo GDi Petrol DCT Signature 6 Seater | ₹ 21 39 900 |
1.5 l Turbo GDi Petrol DCT Signature 6 Seater DT Matte | ₹ 21 54 900 |
1.5 Diesel MT DSL Executive 7 Seater | ₹ 15 99 000 |
1.5 Diesel MT DSL Executive 7 Seater Matte | ₹ 16 14 000 |
1.5 Diesel MT DSL Prestige 7 seater | ₹ 17 17 900 |
1.5 Diesel MT DSL Prestige 7 seater Matte | ₹ 17 32 900 |
1.5 Diesel MT DSL Platinum 7 seater | ₹ 19 45 900 |
1.5 Diesel MT DSL Platinum 7 Seater DT Matte | ₹ 19 60 900 |
1.5 Diesel Automatic DSL Platinum 7 seater | ₹ 20 90 900 |
1.5 Diesel Automatic DSL Platinum 6 Seater | ₹ 20 99 900 |
1.5 Diesel Automatic DSL Platinum 7 Seater DT Matte | ₹ 21 05 900 |
1.5 Diesel Automatic DSL Platinum 6 Seater DT Matte | ₹ 21 14 900 |
1.5 Diesel Automatic DSL Signature 7 Seater | ₹ 21 19 900 |
1.5 Diesel Automatic DSL Signature 7 Seater DT Matte | ₹ 21 34 900 |
1.5 Diesel Automatic DSL Signature 6 Seater | ₹ 21 39 900 |
1.5 Diesel Automatic DSL Signature 6 Seater DT Matte | ₹ 21 54 900 |
ஹூண்டாய் அல்கசார் புகைப்படங்கள்