இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாவது தலைமுறை புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு முன்பதிவு எண்ணிக்கை 20,000 கடந்துள்ளது. குறிப்பாக பண்டிகை காலத்தில் 4000 எண்ணிக்கையில் ஐ20 மாடல் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் ஐ20 காரின் சிறப்புகள்
ரூ.6.80 லட்சம் முதல் துவங்குகின்ற ஐ20 காருக்கு மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது. ஐ20 காரில் Magna, Sportz, Asta, மற்றும் Asta (O) என நான்கு விதமான வேரியண்டில் மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷனுடன் 5 விதமான கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு மொத்தம் 13 வேரியண்டுகளில் கிடைக்கின்றது.
புதிய i20 காரில் 50க்கு மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறுகின்ற 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே ஆகியவற்றுடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி சார்ந்த ப்ளூலிங்க் டெக்னாலஜி சேர்க்கப்பட்டுள்ளது.
ஐ20 காரின் போட்டியாளர்களாக சுசூகி பலேனோ, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா கிளான்ஸா, மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்றவை விளங்க உள்ளது.
ஹூண்டாய் ஐ20 கார் விலை பட்டியல்
Engines | Magna | Sportz | Asta | Asta (O) | |
---|---|---|---|---|---|
1.2-litre | 5MT | ₹ 6,79,900 | ₹ 7,59,900 | ₹ 8,69,900 | ₹ 9,19,900 |
1.2-litre | IVT | ₹ 8,59,900 | ₹ 9,69,900 | ||
1.0-litre | IMT | ₹ 8,79,900 | ₹ 9,89,900 | ||
1.0-litre | 7DCT | ₹ 10,66,900 | ₹ 11,17,900 | ||
1.5-litre D | 6MT | ₹ 8,19,900 | ₹ 8,99,900 | ₹ 10,59,900 |
வழங்கப்பட்டுள்ள உள்ள விலை எக்ஸ்ஷோரூம் இந்தியா. வரும் டிசம்பர் 31,2020 வரை மட்டும் இந்த ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக விலை பிறகு உயர்த்தப்பட உள்ளது.
web title : new Hyundai i20 bookings cross 20000 units