குறைந்த விலையில் அதிகப்படியான இட வசதியை வழங்குகின்ற மாருதி சுசூகி வேகன் ஆர் காரின் புதிய மேம்படுத்தப்பட்ட மாடல் ஜனவரி 23, 2019 யில் விற்பனைக்கு வெளியாகின்றது. கூடுதல் இடவசதி , பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பெற்றிருக்கும்.
67 bhp பவர் மற்றும் 90 NM டார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி வேகன் ஆர் காரில் சிஎன்ஜி தேர்வு கூடுதலாக இணைக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக இடம்பெறலாம். ஆனால் டீசல் என்ஜின் தேர்வு இடம்பெறாது. முந்தைய மாடலை விட கூடுதலான ஸ்டைலிங் அம்சங்களுடன் , பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைக்கு ஏற்றபடி கூடுதல் பாதுகாப்பினை பெற்றிருக்கும்.
முகப்பு தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றிருக்க வாய்ப்பள்ள நிலையில், புதுப்பிக்கப்பட்ட ஹெட்லேட், இன்டிரியரில் டாப் மாடலில் மாருதி ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ் போன்றவை இடம்பெறக்கூடும். மேலும் தாரளமான இடவசதியை வழங்கும் இருக்கை அமைப்பு பெற்றுள்ளது.
வரும் ஜனவரி 23, 2019 யில் புதிய மாருதி வேகன் ஆர் வெளியிடப்பட உள்ளது. இதே தேதியில் நவீனத்துவமான டிசைன் பெற்ற டாடா ஹேரியர் எஸ்யூவி வெளியாக உள்ளது.