வரும் ஜனவரி 23ந் தேதி வெளியாக உள்ள 2019 மாருதி வேகன்ஆர் காருக்கான முன்பதிவு மாருதி சுசூகி அரினா ஷோரூம்களில் மற்றும் ஆன்லைனில் ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி வேகன்ஆர் கார் விற்பனையில் உள்ள மாடலைவிட முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட பல்வேறு வசதிகளுடன் கூடுதலாக புதிய 1.2 லிட்டர் என்ஜினை பெற்று விற்பனைக்கு வெளியாக உள்ளது.

மாருதி வேகன்ஆர்

விற்பனையில் உள்ள மாடல்கள் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெற்றிருந்த நிலையில் தற்போது மொத்தமாக இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வை பெற்றதாக வேகன்ஆர் வெளியிடப்பட உள்ளது. ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்கின்றது.

புதிதாக K12M 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இதைத் தவிர K10B 1.0 லிட்டர் 67 bhp பவர் மற்றும் 90 NM டார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி வேகன் ஆர் காரில் சிஎன்ஜி தேர்வு கூடுதலாக இணைக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக இடம்பெறுகின்றது.

மொத்தம் 7 வேரியன்ட்களில் கிடைக்க உள்ளது. 1.0 லிட்டர் என்ஜின் தேர்வில் LXi, VXi மற்றும் VXi AGS போன்ற பேஸ் வேரியன்டில் மட்டும் கிடைக்க உள்ளது. 1.2 லிட்டர் என்ஜின் VXi , VXi AGS, ZXi மற்றும் ZXi AGS போன்ற வேரியன்டில் மட்டும் கிடைக்க உள்ளது.

2019-maruti-wagon-r-rear-spy

வேகன்-ஆர் போட்டியாளர்கள்

புதிதாக வரவுள்ள மாருதி சுசூகி வேகன் ஆர் காருக்கு போட்டியாக டட்சன் கோ, ஹூண்டாய் சான்ட்ரோ, டாடா டியாகோ, மற்றும் மாருதி செலிரியோ போன்ற கார்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டிருக்கின்றது.

புதிய மாருதி சுசூகி வேகன்ஆர் விலை

வருகின்ற  ஜனவரி 23, 2019 யில் வெளியாக உள்ள மாருதி சுசுகி வேகன்ஆர் கார் விலை ரூ. 4.50 லடசத்தில் தொடங்கி ரூ. 5.80 லட்சத்திற்குள் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வேகன்ஆர் முன்பதிவு அங்கீகரிக்கப்பட்ட மாருதி அரினா டீலர்கள் மற்றும் மாருதி அதிகார்வப்பூர்வ இணையதளம் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது.