Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

வரவிருக்கும்., 2019 ரெனால்ட் க்விட் காரின் டீசர் வெளியானது

by automobiletamilan
September 25, 2019
in கார் செய்திகள்

new kwid

அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் க்விட் காரின் முதல் டீசர் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தபட்டதாக ஸ்டைல் மட்டுமல்ல இன்டிரியர் அமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்பே இணையதளத்தில் தோற்ற அமைப்பு முழுவதுமாக ரெனோ க்விட் வெளியிகிருந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தம் புதிய டீசர் ஆனது வெளியிடப்பட்டுள்ள நிலையில் என்ஜினில் பவர் மற்றும் டார்கில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வெளியாக உள்ளது.

எலக்ட்ரிக் கார் மாடலான ரெனோ K-ZE அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மாடலில் மிக ஸ்டைலிஷான ஹெட்லைட் யூனிட், முன்புற பம்பர் மற்றும் கிரில் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பெரிதாக எந்த மாற்றும் இல்லை. புதிய கிரே ஃபினிஷ் பெற்ற அலாய் வீல் கொண்டுள்ளது. காரின் பின்புறத்தில் டெயில் விளக்குகள் மற்றும் ரிஃபெளெக்டர் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்றபடி க்விட் கிளைம்பர் வேரியண்டில் இடம்பெறுகின்ற ஆரஞ்சு நிற பாடி கிளாடிங், ஓஆர்விஎம் மற்றும் ஸ்கிட் பிளேட்டுகளை கொண்டுள்ளது.

எம்பவி ரக ரெனோ ட்ரைபரின் பெரும்பாலான பாகங்கள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

8 அங்குல தொடு திரை  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்  ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உட்பட யூஎஸ்பி வாயிலாக வீடியோ பிளே செய்யும் ஆப்ஷன் வழங்கப்படலாம்.

0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் தொடர்ந்து பாரத் ஸ்டேஜ் 4 நடைமுறையுடன் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்த என்ஜின் 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் 0.8L கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.

67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும். ஏப்ரல் 2020 க்கு முன்பாக பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்பட உள்ளது.

Tags: Renault Kwidரெனோ க்விட்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version