இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மைக்ரோ எஸ்யூவி காராக அறியப்பட்ட HBX மாடலின் பெயரை டாடா பன்ச் (Tata Punch) என உறுதிப்படுத்தியுள்ளது. ரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற மைக்ரோ எஸ்யூவி கார் நெக்ஸானுக்கு கீழாக நிலை நிறுத்தப்பட உள்ளது.
டாடாவின் மற்ற எஸ்யூவி கார்களான நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற கார்களின் முகப்பு தோற்ற அமைப்பினை அடிப்படையாக பெற்றுள்ள பன்ச் காரில் வழக்கமான டாடாவின் பாரம்பரியாமான கிரில் அமைப்புடன் அமைந்துள்ளது. உயரமான வீல் ஆர்ச், பனி விளக்குகள், 16 அங்குல அலாய் வீல் பெற்று இரு வண்ண கலவை பெற்ற மேற்கூறை மிதக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
தற்போதைக்கு காரின் இன்டிரியர் அமைப்பு படங்கள் வெளியாகவில்லை. இந்த மாடலின் இன்டிரியர் டிசைன் அம்சங்கள் அல்ட்ரோஸ் காரில் இருந்து பெறப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ள நிலையில், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றிருக்கலாம்.
டாடா பன்ச் இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை, 86 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். அடுத்தப்படியாக சற்று கூடுதல் பவரை வழங்கும் டர்போ பெட்ரோல் இன்ஜின் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படும். ஆனால் டீசல் என்ஜின் இடம் பெறாது.
பன்ச் எஸ்யூவி காரை விற்பனைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிட டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.