Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

வரும் 26ம் தேதி அறிமுகமாகிறது புதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP கார்கள்

by automobiletamilan
October 22, 2018
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

டாட்டா மோட்டார் நிறுவனம், புதிய டாட்டா டியாகோ JTP, டிகோர் JTP கார்களை வரும் 26ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ஆட்டோ மற்றும் டாட்டா மோட்டார் இணைந்து ஹாட்பேக் வெர்சன்கள் காம்பேக்ட் செடான்கள் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல்கள் முதல் முறையாக கடந்த பிப்ரவரி மாத்தில் நடந்த 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.

எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட கார்கள், 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர், டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் கொண்டதாக இருக்கும். இந்த கார்கள் டாட்டா நெக்சான் எஸ்யூவிகளில் ஒரு பகுதியாகவே இருந்தது. மேலும் இந்த மோட்டார் ஐந்து-ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கார்கள் ஸ்போர்ட்ஸ் கார்கள் போன்ற திறன் பெற்றிருக்கும். இந்த காரின் இன்ஜின்கள், 110PS ஆற்றலில் உச்சகட்ட பீக்களில் 150Nm-ஆக இருக்கும். இதுமட்டுமின்றி ஸ்போர்ட்ஸ் கார்களை உள்ளது போன்ற எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும்.

டியாகோ JTP, டிகோர் JTP கார்கள் வழக்கமான வெர்சன்களை போன்றஅளவிலேயே இருக்கிறது. இந்த கார்களின் குறைந்த உயரம் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ்கள் குறைவே இருக்கிறது. மேலும் இந்த கார்களில் பெரியளவிலான 15-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் அகலமான 185/60 கொண்ட செக்ஷன் திறன் கொண்ட டயர்களுடனும் உள்ளது.

டியாகோ JTP, டிகோர் JTP கார்களில், சில காஸ்மாடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய பிராண்ட் என்ட் டிசைன்களுடன் கூடிய பெரிய கிரில், ஏர் இன்டெக்ஸ், பென்னட் மற்றும் பெண்டர் வெண்ட்ஸ்களை கொண்டிருக்கும். டைமண்ட் கட் அலாய் வீல்கள் மற்றும் சைடு ஸ்கிர்ட்கள் காருக்கு புதிய தோற்றத்தை கொடுக்கும் வகையில் இருக்கும். இரண்டு வெர்சன்களிலும், வெளிப்புறமாக ரியர்வியூ மிரர்கள் மற்றும் பிளாக் பெயிண்ட் ரூப்களுடன், டிகோர் JTP கார்களில் ரெட்-பிளாக் பனி லேம்ப் ஹவுசிங் பொருத்தப்பட்டுள்ளது.

JTP எடிசன்களில் உட்புறத்தில், பிளாக் இன்டீரியர்களுடன் ஸ்போர்ட்ஸ் கார்களில் உள்ளது போன்ற ஏசி வென்ட்கள், பிரிமியம் லெதர் சீட்கள் மற்றும் காண்டிராஸ்ட் ரெட் நிறத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ள ஸ்டியரிங்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டிகோர் கார்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும்.

இந்த காரில் பாதுகாப்பு வசதிகளாக, முன்புறத்தில் டுயல் ஏர்பேக்ஸ், EBD உடன் கூடிய ABS மற்றும் ரியர் பார்கிங் கேமராகள் பொருத்தப்பட்டிருக்கும். இதுமட்டுமின்றி புரொஜெக்டர் ஹெட்லேம்கள் உள்ளன. மேலும் இந்த புதிய கார்கள், புதிய டிகோர் கார்களை விட ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: LaunchedNew Tata Tiago JTPOctober 26Tigor JTPகார்கள்டிகோர் JTPபுதிய டாட்டா டியாகோ JTPவரும் 26ம் தேதி அறிமுகமாகிறது
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version