வரும் மார்ச் 16 ஆம் தேதி இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட முற்றிலும் மாறுபட்ட பல்வேறு வசதிகளை பெற்ற ஸ்டைலிஷான காராக விளங்க உள்ளது.
தற்போது விற்பனையில் கிடைத்து வருகின்ற மாடலை விட மாறுபட்ட தோற்ற அமைப்பினை பெற்று புதிய வசதிகளுடன் வரவுள்ள இந்த மாடல் முன்பாகவே தாய்லாந்தில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.
2020 ஹோண்டா சிட்டி காரின் நீளம் 100 மிமீ வரையும், அதே நேரத்தில் அகலம் 53 மிமீ அதிகரித்துள்ளது. உயரம் இப்போது 28 மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த காரின் நீளம் அதிகரித்த போதிலும், ஹோண்டா சிட்டி காரின் வீல் பேஸ் 11 மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் மிக அகலமான க்ரோம் கிரில் வழங்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகளும் இணைக்கபட்டுள்ளது. பக்கவாட்டு தோற்ற அமைப்பில் 16 அங்குல அலாய் வீல், சன் ரூஃப் போன்றவற்றை கொண்டிருக்கும்.
இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு i-MMD எனப்படுகின்ற மைல்டு ஹைபிரிட் டெக்னாலாஜி உடன் இணைக்கப்பட உள்ளது. மேலும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினையும் பெற்றதாக விற்பனைக்கு கிடைக்கும்.
மார்ச் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஹோண்டா சிட்டி காரின் முன்பதிவு அன்றைய தினமே துவங்கப்பட உள்ளது.