Categories: Car News

மார்ச் 16.., 2020 ஹோண்டா சிட்டி கார் அறிமுகம்

020 ஹோண்டா சிட்டி கார்

வரும் மார்ச் 16 ஆம் தேதி இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட முற்றிலும் மாறுபட்ட பல்வேறு வசதிகளை பெற்ற ஸ்டைலிஷான காராக விளங்க உள்ளது.

தற்போது விற்பனையில் கிடைத்து வருகின்ற மாடலை விட மாறுபட்ட தோற்ற அமைப்பினை பெற்று புதிய வசதிகளுடன் வரவுள்ள இந்த மாடல் முன்பாகவே தாய்லாந்தில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

2020 ஹோண்டா சிட்டி காரின் நீளம் 100 மிமீ வரையும், அதே நேரத்தில் அகலம் 53 மிமீ அதிகரித்துள்ளது.  உயரம் இப்போது 28 மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த காரின் நீளம் அதிகரித்த போதிலும், ஹோண்டா சிட்டி காரின் வீல் பேஸ் 11 மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் மிக அகலமான க்ரோம் கிரில் வழங்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகளும் இணைக்கபட்டுள்ளது. பக்கவாட்டு தோற்ற அமைப்பில் 16 அங்குல அலாய் வீல், சன் ரூஃப் போன்றவற்றை கொண்டிருக்கும்.

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு i-MMD எனப்படுகின்ற மைல்டு ஹைபிரிட் டெக்னாலாஜி உடன் இணைக்கப்பட உள்ளது. மேலும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினையும் பெற்றதாக விற்பனைக்கு கிடைக்கும்.

மார்ச் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஹோண்டா சிட்டி காரின் முன்பதிவு அன்றைய தினமே துவங்கப்பட உள்ளது.

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

5 hours ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

8 hours ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

1 day ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

1 day ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

1 day ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

1 day ago