Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது

by automobiletamilan
December 16, 2018
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

ரூ. 25,000 செலுத்தி நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி மாடலின் முன்பதிவை இந்திய சந்தையில் டீலர்கள் அல்லது ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யூவி ரக மாடலின் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நிசான் நிறுவனம் கிக்ஸ் எஸ்.யு.வி மாடலை ஜனவரி 2019 முதல் விற்பனைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக க்ராஸ்ஓவர் எஸ்யூவி ரக பிரிவில் இடம்பெற உள்ள அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படுகிற 360-டிகிரி கோணத்திலான 4 கேமராக்கள் காரை சுற்றி அமைக்கப்பட்டு அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதியுடன், 17 அங்குல அலாய் வீல், எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்கு மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் தேர்வுகளில் நிசான் கிக்ஸ் கிடைக்க உள்ள நிலையில், இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 BHP பவர், 142 NM டார்க் மற்றும் 5 வேக மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. கிக்ஸ் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 BHP பவர், 240 NM டார்க் 6 வேக மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது.
5 இருக்கை கொண்ட கிக்ஸ் மாடலில் பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கி இருப்பதுடன் நேர்த்தியான கட்டமைபை பெற்று விளங்குவதனால் இளைய தலைமுறை கார் வாங்குவோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற கிக்ஸ் மாடலுக்கு போட்டியாக களத்தில் ரெனோ கேப்டூர், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எஸ் க்ராஸ் போன்றவற்றை எதிர்கொள்ள உள்ளது.
நிசான் கிக்ஸ் விலை ரூ. 9 லட்சம் தொடங்கி ரூ. 15 லட்சம் வரை அமைந்திருக்கலாம்.
Tags: NissanNissan KicksSUVநிசான் கிக்ஸ்நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan