இந்திய சந்தையில் புதிதாக நிசான் கிக்ஸ் எஸ்யூவி மாடல் 9.55 லட்சம் ரூபாய் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. கிக்ஸ் டீசல் மாடல் 10.85 லட்சம் ரூபாயில் தொடங்குகின்றது.
ரெனோ-நிசான் கூட்டு நிறுவனத்தின் மேம்பட்ட புதிய M0 பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட கிக்ஸ் மாடலில் பல்வேறு நவீன அம்சங்கள் இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
ரெனோ கேப்டூர் காரில் இடம்பெற்றுள்ள அதே பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் தேர்வுகளில் கிக்ஸ் கிடைக்க உள்ளது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 BHP பவர், 142 NM டார்க் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. கிக்ஸ் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 BHP பவர், 240 NM டார்க் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
5 இருக்கை கொண்ட கிக்ஸ் மாடலில் இந்தியாவில் முதன்முறையாக க்ராஸ்ஓவர் எஸ்யூவி ரக பிரிவில் இடம்பெற உள்ள அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படுகிற 360-டிகிரி கோணத்திலான 4 கேமராக்கள் காரை சுற்றி அமைக்கப்பட்டு அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியை பெற்றதாக வந்துள்ளது.
மேலும், இந்த காரில் 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதியுடன், 17 அங்குல அலாய் வீல், எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்கு, 8 வழிகளில் ஒட்டுநர் இருக்கை மாற்றம், ப்ளூடுத், யூஎஸ்பி , Aux-இன் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவற்றை பெற்றுள்ளது.
XL, XV, XV Premium மற்றும் XV Premium Option என மொத்தமாக நான்கு வகையான மாறுபாட்டை பெற்றுள்ளது. குறிப்பாக வழங்கப்பட்டுள்ள 7 நிறங்கள் அனைத்து வேரியன்டிலும், டூயல் டோன் நிறங்கள் டாப் XV Premium Option வேரியன்டில் மட்டும் கிடைக்கும்.
XL பெட்ரோல் | ரூ. 9.55 லட்சம் |
XV பெட்ரோல் | ரூ. 10.95 லட்சம் |
XL டீசல் | ரூ. 10.85 லட்சம் |
XV டீசல் | ரூ. 12.49 லட்சம் |
XV Premium (டீசல்) | ரூ. 13.65 லட்சம் |
XV Premium + (டீசல்) | ரூ. 14.65 லட்சம் |
( எக்ஸ்-ஷோரூம் இந்தியா )
ரெனோ கேப்டூர், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எஸ் க்ராஸ் போன்றவற்றை எதிர்கொள்ளும் மாடலாக நிசான் கிக்ஸ் எஸ்யூவி விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிகப்படியான பேனல்கள் இல்லாமல் எளிமையான வடிவமைப்பினை பெற்று அர்பன் பயன்படுகளுக்கு ஏற்ற வகையில் 108 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் பிஎம்டபிள்யூ…
ஃபோக்ஸ்வேகன் இந்தியா விற்பனை செய்து வருகின்ற டைகன் மற்றும் விர்டஸ் எ இரு மாடல்களிலும் தொடர்ந்து பல்வேறு கூடுதல் வசதிகள்…
65க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2024 நிசான் மேக்னைட் எஸ்யூவி காரில் தற்பொழுது Visia, Visia+,Acenta,…
ஃபேரிங் ஸ்டைலை பெற்ற சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் GSX-8R ஸ்போர்ட்டிவ் பைக் மாடல் 776cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின்…
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரபலமான ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 2.2…
பண்டிகை காலத்தை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திஃ பிரசத்தி பெற்ற 'Punch' எஸ்யூவி மாடலில் கேமோ எடிசனை மற்ற மாடல்களை…