Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

நிசான் மேக்னைட் காரின் இன்ஜின் மற்றும் வேரியண்ட் விபரம்

by automobiletamilan
November 2, 2020
in கார் செய்திகள்

அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு கிடைக்க உள்ள புதிய மேக்னைட் காரின் இன்ஜின் மற்றும் வேரியண்ட் விபரத்தை நிசான் இந்தியா வெளியிட்டுள்ளது. XE, XL, XV Upper மற்றும் XV Premium என 4 வேரியண்டில் 20 வகையான மாறுபாடுகளில் கிடைக்கின்றது.

நிசான் மேக்னைட் இன்ஜின்

4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற மேக்னைட் காரில் 1.0L B4D பெட்ரோல் 1.0L HRA0 டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷனை பெற்று மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இந்த காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இடம்பெறவில்லை.

100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ எனவும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 17.7 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சாதாரன 1.0 லிட்டர் B4D பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜ் வழங்குகின்றது.

மேக்னைட் வேரியண்ட் வசதிகள்

XE (பேஸ்) : மேக்னைட்டின் ஆரம்ப நிலை வேரியண்டில் 16 அங்குல வீல், ஸ்கிட் தகடுகள், மேற்கூரை ரெயில்கள், 3.5 அங்குல எல்.சி.டி கிளஸ்ட்டர், ஆல் பவர் விண்டோஸ் மற்றும் இரட்டை நிறத்தை பெற்ற உட்புறத்தை கொண்டிருக்கின்றது.

XL (மிட்) :  6 ஸ்பீக்கர்களுடன் ஒருங்கிணைந்த ஆடியோ சிஸ்டம், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல், ஆட்டோ ஏசி மற்றும் எலக்ட்ரிக் அட்ஜெஸ்டபிள் மற்றும் மடிக்கக்கூடிய வெளிப்புற கண்ணாடிகள் பெற்றதாக வருகிறது.

XV (High) : 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் (டிஆர்எல்) மற்றும் பனி விளக்குகள், 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 7 அங்குல டிஎஃப்டி  கிளஸ்ட்டர், வாய்ஸ் கன்ட்ரோல் , ரியர் வியூ கேமரா மற்றும் புஷ் ஸ்டார்ட் பட்டன் உள்ளது.

XV (Premium) ; எல்இடி பை-ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், குரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி அவுண்ட் வியூ மானிட்டர் கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் மற்றும்  ஸ்போர்ட்டிவ் இன்டீரியர் பெற்றிருக்கும்.

நிசான் வழங்குகின்ற ஆப்ஷனல் `டெக் பேக் வேரியண்டில் ‘ வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரி ஃபையர், ஆம்பியன்ட் விளக்குகள், பட்டெல் விளக்குகள் மற்றும் உயர் தர ஜே.பி.எல் ஸ்பீக்கர் இணைக்கப்பட்டுள்ளது.

1.0L B4D Petrol MT
  • MT XE
  • MT XL
  • MT XV
  • MT XV with Tech Pack
  • MT XV Pre
  • MT XV Pre with Tech Pack
1.0L HRA0 Petrol MT
  • Turbo MT XL
  • Turbo MT XV
  • Turbo MT XV with Tech Pack
  • Turbo MT XV Premium
  • Turbo MT XV Premium with Tech Pack
  • Turbo MT XV Premium (O)
  • Turbo MT XV Premium (O) with Tech Pack
1.0L HRA0 Petrol CVT
  • Turbo X-Tronic CVT XL
  • Turbo X-Tronic CVT XV
  • Turbo X-Tronic CVT XV with Tech Pack
  • Turbo X-Tronic CVT XV Premium
  • Turbo X-Tronic CVT XV Premium with Tech Pack
  • Turbo X-Tronic CVT XV Premium (O)
  • Turbo X-Tronic CVT XV Premium (O) with Tech Pack

 

அதிகாரப்பூர்வ முன்பதிவு அடுத்த சில நாட்களில் துவங்கப்பட்டு, தீபாவளிக்கு முன்பாக அல்லது பிறகு நிசான் மேக்னைட் எஸ்யூவி ரூ.5.30 லட்சம் முதல் ரூ.8 லட்சத்திற்குள் வெளியிடப்படலாம்.

web title : Nissan Magnite engine and variant details revealed

Tags: Nissan Magniteநிசான் மேக்னைட்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version