• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

நிசான் மேக்னைட் குரோ எடிசன் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
7 October 2023, 3:27 pm
in Car News
0
ShareTweetSend

nissan magnite kuro

ரூ.8.27 லட்சம் ஆரம்ப விலையில் நிசான் மேக்னைட்காரில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குரோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் சிவிடி என இரு விதமான கியர்பாக்ஸ் கொண்டு பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கின்றது.

முழுமையான கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள குரோ எடிசன் மாடல் பல்வேறு இடங்களில் மேக்னைட், நிசான் லோகோ போன்றவற்றில் சிவப்பு நிற குரோ பேட்ஜிங்கும் பெற்றுள்ளது.

Nissan Magnite Kuro Edition

நிசான் இந்தியா வெளியிட்டுள்ள மேக்னைட் குரோ எடிசன் மாடலில் குறிப்பிடதக்க சில மாற்றங்களாக, முன்பக்க கிரில், கிரில் சுற்றிய பகுதிகள், ஸ்கிட் பிளேட், கூரை தண்டவாளம், கதவு கைப்பிடிகள், அலாய் வீல், ஜன்னல் இன்ஷர்ட் மற்றும் ஹெட்லைட்களில் கூட கருமைக்கு முக்கியத்துவம் உள்ளது.

வெளிப்புறத்தில் உள்ள கருப்பு அல்லாத சில இடங்களாக ‘நிசான்’, ‘மேக்னைட்’ மற்றும் ‘குரோ’ பேட்ஜ்கள் மற்றும் சிவப்பு பிரேக் காலிப்பர்கள் ஆகியவை கொண்டுள்ளது.

குரோ எடிசனின் இன்டிரியரில், சன் வைசர், கதவு கைப்பிடிகள், ஸ்டீயரிங் வீல் மற்றும் ஏசி வென்ட் சுற்றிலும் கருப்பு நிறமாக கிடைக்கும்.  டாப் XV டிரிம் அடிப்படையிலான குரோ எடிஷன், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ரியர் ஏசி வென்ட்கள் போன்ற டாப்-ஸ்பெக் எக்ஸ்வி பிரீமியம் டிரிமிலிருந்து சில அம்சங்களையும் பெறுகிறது.

XV டிரிமில் உள்ள மற்ற அம்சங்களில் 8-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் காலநிலை கட்டுப்பாடு போன்றவை உள்ளன.

சாதாரன 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. தற்பொழுது இந்த என்ஜினில் கூடுதலாக ஏஎம்டி கியர்பாக்ஸ் வந்துள்ளது.

அடுத்து, மேக்னைட் எஸ்யூவி காரில் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

NISSAN MAGNITE KURO PRICES (EX-SHOWROOM)
Trims Prices
Kuro petrol MT ₹ 8.27 lakh
Kuro turbo-petrol MT ₹ 9.65 lakh
Kuro turbo-petrol CVT ₹ 10.46 lakh

வரும் அக்டோபர் 12 ஆம் தேதி நிசான் மேக்னைட் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற மாடலின் விலை அறிவிக்கப்பட உள்ளது.

Tags: Nissan Magnite
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version