• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மேக்னைட் எஸ்யூவி சிறப்புகள் மற்றும் விலை எதிர்பார்ப்புகள்

by MR.Durai
1 December 2020, 5:32 pm
in Car News
0
ShareTweetSend

நிசான் மேக்னைட் எஸ்யூவி விலை

நிசான் இந்தியா நிறுவனத்தின் புதிய மேக்னைட் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.5.50 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது.

நிசான் இணையதளம் மற்றும் டீலர்கள் வாயிலாக முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில், கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படுகின்றது. விலை நாளை அறிவிக்கப்பட்டாலும் டெலிவரி டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் மிகவும் விலை குறைந்த பல்வேறு வசதிகளை வழங்கும் மாடலாக மேக்னைட் எஸ்யூவி காரை பெட்ரோல் இன்ஜின் மட்டும் பெற்றதாக வரவுள்ளது.

மேக்னைட் எஸ்யூவி இன்ஜின் விபரம்

100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ எனவும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 17.7 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சாதாரண 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜ் வழங்குகின்றது.

இந்த காரில் XE, XL, XV Upper மற்றும் XV Premium என 4 வேரியண்டில் 20 வகையான மாறுபாடுகளில் கிடைக்க உள்ளது.

போட்டியாளர்கள்

மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, கியா சொனெட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. இதுதவிர, அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் ரெனோ கிகர் விற்பனைக்கு வரவுள்ளது.

மேக்னைட் விலை எதிர்பார்ப்புகள்

முன்பே நிசான் மேக்னைட் விலை கசிந்துள்ள நிலையில் தொடக்க நிலை வேரியண்ட் ரூ.5.50 லட்சம் முதல் அதிகபட்சமாக டாப் வேரியண்ட் ரூ.9.55 லட்சத்திற்குள் அமையலாம்.

Tags: Nissan Magnite
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version