Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

நவம்பர் 26ல் மஹிந்திரா BE 6e, XEV 9e அறிமுகமாகிறது

by MR.Durai
4 November 2024, 2:06 pm
in Car News
0
ShareTweetSend

mahindra xev 9e teased

வரும் நவம்பர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகின்ற விழாவில் மஹிந்திராவின்  INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட BE 6e மற்றும் XEV 9e என இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவிகளின் உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

XEV மற்றும் BE

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ள XEV மற்றும் BE என இரண்டு பிராண்டுகளிலும் தலா ஒன்று என இரண்டு மாடல்கள் வரவுள்ளது. இதில் முதல் மாடலாக வரவுள்ள XEV 9e ஏற்கனவே கான்செப்ட் நிலையில் XUV.e9 என அறியப்பட்டு வந்தது.

அடுத்தப்படியாக, BE (Born Electric) என்ற பிராண்டில் முன்பாக BE.05 என காட்சிப்படுத்திய கான்செப்ட் ரக மாடல் விற்பனைக்கு BE 6e என வெளிடப்பட உள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.20 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது.

mahindra xev 9e teased view

மஹிந்திரா XEV 9e

மிகவும் தாராளமான இடவசதியுடன் பல்வேறு ஸ்டைலிஷான அம்சங்களை பெற்ற XEV 9e கூபே ரக ஸ்டைலை  கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் இன்டீரியரில் இரண்டு அகலமான தொடுதிரை செட்டப் கொடுக்கப்பட்டு 70kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 450-550 கிமீ ரேஞ்ச் வெளிப்படுதலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

5 இருக்கைகளை பெற உள்ள எக்ஸ்இவி 9இ காரின் பரிமாணங்கள் 4,790 மிமீ நீளம், 1,905 மிமீ அகலம் மற்றும் 1,690 மிமீ உயரம், 2,775 மிமீ வீல்பேஸைக் கொண்டிருக்கும் என மஹிந்திரா வெளிப்படுத்தியுள்ளது.

மஹிந்திரா BE 6e

முன்பாக BE05 எஸ்யூவி கார் என அறியப்பட்ட மாடல் தற்பொழுது பிஇ 6இ என பெயரிடப்பட்டுள்ள நிலையில் முன்பே மஹிந்திரா வெளியிட்ட அளவுகளின் படி,  4370 மீ நீளம், 1900 மீ அகலம் மற்றும் 1635 மீ உயரம், 2775 மீ வீல்பேஸ் கொண்டதாக இருக்கும் எனவும் இதனை ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் வாகனம் (Sports Electric Vehicle- SEV) என குறிப்பிட்டிருந்தது.

டீசர் வெளியிடப்பட்டுள்ள இரு மாடல்களும் சர்வதேச அளவில் நவம்பர் 26 ஆம் தேதி சென்னையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விற்பனைக்கு அனேகமாக ஜனவரி 2025 முதல் கிடைக்க துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

mahindra be 6e teased

Related Motor News

BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா

BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா

மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிசன் ரூ.27.79 லட்சத்தில் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள் மே 2025

முதல் நாளில் 30,179 முன்பதிவை கடந்துள்ள மஹிந்திரா பிஇ 6, எக்ஸ்இவி 9இ மின்சார கார்கள்.!

Tags: Mahindra BEMahindra BE 6eMahindra XEV 9e
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Maruti Suzuki suv teased victoris

செப்டம்பர் 3ல் மாருதியின் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

kwid cng

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்

பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்

எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்

2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!

ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan