பியாஜியோ நிறுவனம் ரூ.3.46 லட்சம் விலையில் பயணிகளுக்கான அபே E-city FX NE Max என்ற மூன்று சக்க ஆட்டோ மாடலை தமிழ்நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ரேஞ்சு அதிகபட்சமாக 145 கிமீ வரை வழங்கலாம்.
பியாஜியோ இந்திய சந்தையில் 2019 முதல்ல் e3W மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் தற்பொழுது வரை, 26,000க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. பெரும்பான்மை வாடிக்கையாளர்கள் டெல்லி அதைத் தொடர்ந்து ஆக்ரா, அகர்தலா, பெங்களூரு, சில்சார், கொச்சி மற்றும் ஜம்மு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Piaggio Ape E-city FX NE Max
பியாஜியோவின் புதிய அபே E-city FX NE மேக்ஸ் எலக்ட்ரிக் ஆட்டோ 145km (+ 5kms) மற்றும் 12 இன்ச் டயர் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரத்திறன் மற்ற முன்னேற்றங்களுடன் உள்ளது. பெண்கள் குழுவால் EV ரேஞ்ச் முழுவதுமாக பியாஜியோவின் பாராமதி தொழிற்சாலையில் முழுமையாக அசெம்பிள் செய்யப்படுகின்றது.
ஒரு சார்ஜில் 145 கிமீ ரேஞ்சு, 20% கிரேடபிளிட்டி மற்றும் 3+2 ஆண்டுகள் அல்லது 1.75 லட்சம் கிமீ வாரண்டி வழங்குகின்றது. மூன்று சக்கர ஆட்டோக்களுக்கு நமது மாநிலத்தில் பேட்டரி ஸ்வாப்பிங் டெக்னாலாஜி இல்லாததால், தமிழ்நாட்டில் ஃபிக்ஸ்டு பேட்டரி விருப்பத்துடன் மட்டுமே வந்துள்ளது.
அபே இ-சிட்டி எஃப்எக்ஸ் என்இ மேக்ஸ் கவர்ச்சிகரமான மற்றும் கண்ணைக் கவரும் கிராபிக்ஸ் மூலம் சிறந்த இத்தாலிய வடிவமைப்பு மரபுகளை கொண்டதாக விளங்குகின்றது.
மேலும், பியாஜியோ தமிழ்நாடு அரசுடன் பேட்டரி ஸ்வாப்பிங் தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையும் துவங்கியுள்ளது. இந்நிறுவனம், சன் மொபைலிட்டி மற்றும் ரிலையன்ஸ் குழமத்தின் எக்ஸிகாம் உடன் பேட்டரி ஸ்வாப்பிங் தொழில்நுட்பத்தை வழங்கி வருகின்றது.
ஃபிக்ஸ்டு பேட்டரி முறையை விட ஸ்வாப்பிங் பேட்டரி விலை 40 % முதல் 50 % வரை குறைவான விலையில் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் பியாஜியோ Ape E-city FX NE Max விலை INR 3,46,240 (எக்ஸ்-ஷோரூம்).