Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி ஏப்ரல் 17-ல் அறிமுகம்

by automobiletamilan
March 27, 2019
in கார் செய்திகள்

hyundai venue suv news in tamil

4 மீட்டருக்கு குறைந்த நீளத்தில் பல்வேறு நவீன வசதிகளை உள்ளடக்கியதாக ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) எஸ்யூவி இந்தியாவில் மே மாத மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது. வரும் ஏப்ரல் 17ந் தேதி நியூ யார்க் ஆட்டோ ஷோவில் முதன்முறையாக வென்யூ அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கார்லினோ என்ற கான்செப்ட் மாடலை பின்பற்றி ஹூண்டாய் Qxi என்ற பெயருடன் தயாரிக்கப்பட்டு வந்த வெனியூ எஸ்யூவி மாடல் தொடர்பான ‘Connected SUV’ என்ற டேக்லேன் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்

வரும் ஏப்ரல் 17ந் தேதி நியூ யார்க் மோட்டார் ஷோவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ள வென்யூ எஸ்யூவி காரில் 100 HP மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் அடுத்த பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினை பெற்றிருக்கும்.

மிக நேர்த்தியான பகல் நேர ரன்னிங் விளக்குகள், மற்றும் புராஜெக்டர் ஹெட்லைட் யூனிட் தனியாக வழங்கப்பட்டு, பெரும்பாலான பகுதிகளில் க்ரோம் பூச்சு உட்பட மேற்கூறையில் சன் ரூஃப் என பல்வேறு நவீன அம்சங்களை கொண்டதாகவும், புதுவிதமான வடிவமைப்பினை பெற்ற அலாய் வீல் கொண்டிருக்கும்.

ஹூண்டாய் QXi காம்பேக்ட் எஸ்யூவி
ஹூண்டாய் QXi காம்பேக்ட் எஸ்யூவி

இன்டிரியரில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சத்தை பெற்ற தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் கிளஸ்ட்டர், மேலும் டெலிமேட்டிக்ஸ் ஆப் உள்ளிட்ட வசதிளுடன், மடிக்கும் எலக்ட்ரிக் முறையிலான மிரர் அகியவற்றை பெற்றுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக புதிய ஹூண்டாய் காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி விளங்க உள்ளது.

Tags: Hyundai Venueஹூண்டாய்ஹூண்டாய் வென்யூ
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version