இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம், பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது எஸ்யூவி மற்றும் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.65,000 வரை தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதிகபட்ச சலுகைகளை கிகர் எஸ்யூவி மாடல் பெறுகின்றது.
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள், தள்ளுபடிகளைப் பெறலாம், இவை அனைத்தையும் அக்டோபர் 31, 2023 வரை மட்டுமே கிடைக்கும்.
ரெனோ கிகர் எஸ்யூவி காருக்கு அதிகபட்சமாக ரூ. 65,000 தள்ளுபடி வழங்கப்படும் நிலையில், இவற்றில் ரூ. ரொக்க தள்ளுபடியும் அடங்கும். 25,000, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ. 20,000 மற்றும் கூடுதல் லாயல்டி பலன்களை வழங்குகின்றது.
அடுத்ததாக, க்விட் மற்றும் ட்ரைபர் எம்பிவி காருக்கு ரூ.50,00 வரை சலுகைகளை பெறலாம். 20,000 ரூபாய் வரை ரொக்க தள்ளுபடி உட்பட 20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கூடுதல் லாயல்டி போனஸ் வழங்குகின்றது.
மேலே குறிப்பிட்டுள்ள புதிய நுகர்வோர் சலுகைகளைத் தவிர, ரெனால்ட் தன்னுடைய தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மூன்றாம் ஆண்டு உத்தரவாதம், மூன்று ஆண்டு பராமரிப்பு பேக் மற்றும் மூன்று வருட சாலையோர உதவி ஆகியவற்றுடன் ரூ. 20,000 ரொக்கப் பலனை ரெனால்ட் வாகனத்தை வாங்கினால் கிடைக்கும்.
கூடுதலாக ரெனோ நிறுவனம், ரூ.12,000 வரை கார்ப்பரேட் வாடிகையாளர்களுக்கு மற்றும் ரூ.5,000 வரை கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்குகின்றது. மேலும், ரெனால்ட் வாடிக்கையாளர்கள் ரெஃபர் செய்தால், வாங்குவதன் அடிப்படையில், குறிப்பிடும் வாடிக்கையாளர் மற்றும் குறிப்பிடப்பட்ட வாடிக்கையாளர் ரூ.10,000 வரை பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…