வரும் ஜனவரி 2021 விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சப் காம்பாக்ட் எஸ்யூவி ரெனோ கைகெர் ஷோ கார் டீசர் முதன்முறையாக வெளியாகியுள்ளது. முன்பாக இதே பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கபட்ட நிஸான் மேக்னைட் எஸ்யூவி நவம்பர் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது.
ரெனோ-நிசான் கூட்டு நிறுவனத்தின் CMF-A பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள 4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற சப்-காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள புதிய மேக்னைட் காரின் இன்ஜின் உட்பட பெரும்பாலான பாகங்களை பகிர்ந்து கொள்ள உள்ளன. இந்த சந்தையை பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, கியா சொனெட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகியவற்றுடன் மேக்னைட்டினை எதிர்கொள்ள உள்ளது.
ரெனால்ட்டின் க்விட்,ட்ரைபர், டஸ்ட்டர் போன்ற கார்களின் வெற்றியை தொடர்ந்து மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ள கைகெர் டிசைன் அம்சங்கள் மிக நேர்த்தியான எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் கீழ் பகுதியில் பம்பரில் வழங்கப்பட்ட ஹெட்லைட் பெற்று மிக நேர்த்தியான முன்புற கிரில் அமைப்பினை பெற்றிருக்கும். மேக்னைட் காரை விட சற்று கூடுதலான உயரத்தை கொண்டிருக்கும்.
மற்றபடி இன்டிரியரில் பெரும்பாலான அம்சங்கள் விற்பனையில் உள்ள ட்ரைபர் காரினை போலவே அமைந்திருக்கும். குறிப்பாக தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் வேரியண்டில் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்றவற்றுடன் கனெக்ட்டிவிட்டி அம்சங்களும் இணைக்கப்பட்டிருக்கும்.
மேக்னைட்டில் இடம்பெற்றுள்ள இன்ஜின் ஆப்ஷன பெற உள்ள ரெனால்ட் கைகெர் காரில் 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் என்ஜின் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ எனவும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 17.7 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, பேஸ் வேரியண்டுகளில் 1.0 லிட்டர் B4D பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜ் வழங்குகின்றது. இந்த எஸ்யூவி மாடலிலும் டீசல் இன்ஜின் இடம்பெறும் வாய்ப்புகள் இல்லை. வரும் நவம்பர் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
web title : Renault Kiger compact SUV concept teased