வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு வசதிகளை பெற்ற ரெனோ க்விட் நியோடெக் எடிஷன் ரூ.4.37 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இரு இன்ஜின் ஆப்ஷனுடன் கிடைக்கின்றது.
க்விட் நியோடெக் எடிசனில் எந்த இன்ஜின் மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் 0.8L கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.
67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.
க்விட் நியோடெக் எடிசன்
தோற்ற அமைப்பில் சிறிய ரக ஹேட்ச்பேக் கார்களில் ப்ளூ மற்றும் சில்வர் டூயல் டோன் கொடுக்கப்பட்டு மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. இந்த மாடலில் கிரே நிறத்திலான வீல், சி பில்லரில் 3டி முறையிலான டிகெல்ஸ் மற்றும் ஸ்டைலிஷான க்ரோம் இன்ஷர்ட் கிரிலில் உள்ளது.
இன்டிரியரில் நியோடெக் எடிசனில் 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பினை பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகள் உள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் க்ரோம் இன்ஷர்ட்ஸ், ப்ளூ நிறத்திலான தையல்கள் மற்றும் ஃபேபரிக் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஏஎம்டி டையலில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
Renault Kwid Price in Tamil Nadu
KWID STD 0.8 | ₹307800 |
KWID RXE 0.8 | ₹377800 |
KWID RXL 0.8 | ₹407800 |
KWID RXL 1.0 | ₹429800 |
KWID RXT 0.8 | ₹437800 |
KWID NEOTECH 0.8 L | ₹437800 |
KWID NEOTECH 1.0L MT | ₹459800 |
KWID RXL 1.0 EASY-R | ₹461800 |
KWID RXT 1.0L (O) | ₹467500 |
KWID CLIMBER (O) | ₹488700 |
KWID NEOTECH 1.0L EASY-R | ₹491800 |
KWID RXT(O) 1.0L EASY-R | ₹499500 |
KWID CLIMBER(O) EASY-R | ₹520700 |
(Ex-showroom Tamil Nadu)
web title – Renault Kwid Neotech editon Launched price at Rs.4.37 lakhs – car news in Tamil