இந்தியாவின் குறைந்த விலையில் 7 இருக்கை கொண்ட ட்ரைபர் மாடலின் மேம்படுத்தப்பட்ட டிசைன், வசதிகளுடன் கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பெற்றதாக உறுதியான கட்டுமானத்துடன் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜூலை 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.
2025 Renault Triber
டரைபர் காரில் உள்ள 1.0 லிட்டர் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக டர்போ பெட்ரோல் ஆப்ஷன் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக வரவிருக்கும் புதிய மாடலில் எல்இடி ஹெட்லைட் உடன் ரன்னிங் விளக்குடன் பம்பர் சார்ந்த மாற்றங்களுடன் கிரில் பகுதியில் தற்பொழுதுள்ள ரெனால்ட் கார்களின் டிசைனை பெற்றிருக்கலாம், கூடுதலாக இன்டீரியரில் சிறிய அளவிலான டேஸ்போர்டின் மேம்பாடு டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறலாம்.
பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 6 ஏர்பேக்குகளை அடிப்படையாக கொண்டிருப்பதுடன் ஏபிஎஸ் உடன் இபிடி, இஎஸ்பி போன்றவை பெற்றதாக எதிர்பார்க்கலாம், மேலும் பாரத் NCAP பாதுகாப்பு சோதனைக்கு ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்.
ஜூலை 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு உடனடியாக டெலிவிரி துவங்கப்படலாம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 5 மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் ட்ரைபர், கிகர் மேம்பட்ட மாடல்களை விரைவிலும், 2026ல் டஸ்ட்டர், 7 இருக்கை போரியல் மற்றும் துவக்கநிலை க்விட் எலக்ட்ரிக் ஆகியவற்றை கொண்டு வரக்கூடும்.
image – vshankar88/ Youtube