• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஸ்கோடா இந்தியா

by MR.Durai
5 January 2024, 6:19 am
in Car News
0
ShareTweetSend

skoda Kuhsaq elegance edition

ஸ்கோடா இந்தியா நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 1 லட்சத்துக்கும் கூடுதலான வாகனங்ளை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் ஸ்லாவியா, கோடியாக் மற்றும் குஷாக் என மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

கடந்த ஜனவரி 1, 2022 முதல் டிசம்பர் 31,2022 வரையில் 53,721 கார்களும், கடந்த 2023 ஆம் ஆண்டில் 48,755 கார்களையும் விற்பனை செய்துள்ளது. குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டை விட விற்பனை எண்ணிக்கை குறைவாக அமைந்திருக்க காரணம் உதிரிபாகங்கள் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், கோடியாக் 2022 வருடத்தை விட 100% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Skoda Auto India

இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் சீரான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் வரும் நாட்களில் தனது முதல் எலக்ட்ரிக் கார் உட்பட ஆக்டேவியா மற்றும் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை  விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதை போலவே ஸ்கோடா ஆட்டோ தனது குஷாக் எஸ்யூவி விலையை ரூ.16,000 முதல் ரூ.1,00,000 வரை உயர்த்தியுள்ளது. அடுத்து ஸ்லாவியா செடானின் விலையை ரூ.11,000 முதல் ரூ.64,000 வரை அதிகரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 120 வாடிக்கையாளர் சேவை மையங்கள் இருந்து, ஸ்கோடா ஆட்டோ இந்தியா 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 260 ஆக தனது சேவை மையத்தை உயர்த்தியுள்ளது.

ஸ்கோடா ஆட்டோவிற்கு இந்தியா தொடர்ந்து முக்கிய சந்தையாகவும், ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

Related Motor News

ஸ்கோடா காருக்கு ஜிஎஸ்டி குறைப்பு ரூ.3.30 லட்சம் வரை மற்றும் சிறப்பு சலுகைகள்.!

25வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஸ்கோடா இந்தியா

ரூ.46.89 லட்சத்தில் 2025 ஸ்கோடா கோடியாக் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் 25 ஆண்டுகளை கொண்டாடும் ஸ்கோடா ஆட்டோ..!

ஸ்கோடா ஸ்லாவியா மான்டே கார்லோ எடிசன் அறிமுகமானது

2025 ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்

Tags: Skoda KodiaqSkoda Slavia
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan