ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் புராஜெக்ட் 2.0 செயல் திட்டத்தில் முதல் மாடலாக தயாரிக்கப்பட்டு வருகின்ற குஷாக் எஸ்யூவி காரின் 92 % உதிரி பாகங்கள் உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரெட்டா, செல்டோஸ் என இரு மாடல்களுக்கும் மிக கடுமையான சவாலினை ஏற்படுத்த வல்லதாக விளங்கும்.

குஷாக் இன்ஜின் விபரம்

முதன்முறையாக ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஸ்கோடா விஷன் இன் காரின் உற்பத்தி நிலை மாடலுக்கு குஷாக் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு மார்ச் 2021 வெளியிடப்பட உள்ளது.

குஷாக்கில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (115PS/200Nm) மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் (150PS/250Nm) மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் பெறலாம். டீசல் என்ஜின் இடம்பெறுவதற்கு மாற்றாக சிஎன்ஜி என்ஜின் பெறக்கூடும் என எதிர்பார்கப்படுகின்றது.

MQB A0 IN மாடூலர் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள காரின் தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியர் அமைப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்தியாவில் ஸ்கோடாவின் முதல் கனெக்ட்டிவ் சார்ந்த கார் மை ஸ்கோடா கனெக்ட் தொழில்நுட்பத்தையும் கொண்ட நவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டங்களுடன் 12.3 இன்ச் சென்டரல் கன்சோலில் தொடுதிரை ஸ்கிரீனையும் கொண்டுள்ளது. பிற அம்சங்களில் தானியங்கி காலநிலை கட்டுப்பாட்டு அமைப்பு, சன்ரூஃப் மற்றும் ஆம்பின்ட் விளக்குகள் ஆகியவை அடங்கும்.

ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, கியா செல்டோஸ், நிஸான் கிக்ஸ் உட்பட வரவிருக்கும் ஃபோக்ஸ்வேகன் டைகன் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.