டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் ஸ்டைலிஷான பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக டாடா அல்ட்ரோஸ் கார் டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச அளவில் அறிமுகமாகிறது. அறிமுகத்திற்கு பிறகு முன்பதிவும் விற்பனைக்கு ஜனவரி 2020 முதல் தொடங்க உள்ளது.
டாடாவின் இம்பேக்ட் டிசைன் 2.0 அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு ஆல்ஃபா பிளாட்பாரத்தில் (Tata’s ALFA architecture) வடிவமைக்கப்பட்டிருக்கின்ற இந்த பிளாட்ஃபாரம் பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கு ஏற்றதாகவும், செடான் , எஸ்யூவி போன்ற மாற்று ரக மாடல்களையும் உருவாக்க இயலும். இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என விற்பனைக்கு வரவுள்ளது.
அறிமுகத்தின் போது விலையை தவிர என்ஜின் உட்பட அனைத்து முக்கிய விபரங்களும் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து முன்பதிவு டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
அல்ட்ரோஸ் காருக்கு நேரடி போட்டியை மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்ஸா, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மாடல்கள் ஏற்படுத்த உள்ளது. அல்ட்ராஸ் காரின் விலை ரூ.5 முதல் ரூ.8 லட்சத்தில் அமைய வாய்ப்புகள் உள்ளது.
மேலும் படிங்க – டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி விபரம்