ரூ.5.29 லட்சம் ஆரம்ப முதல் விலை அறிவிக்கப்பட உள்ள டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரில் பெட்ரோல், டீசல் என்ஜினுடன் மொத்தமாக ஐந்து வேரியண்டுகள் மற்றும் நான்கு விதமான கஸ்டமைஸ் அம்சங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
முதலில் இரண்டு என்ஜின்களின் விபரத்தை அறிந்து கொள்ளலாம். முதற்கட்டமாக இரண்டிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்க உள்ளது.
1.5 லிட்டர், 4 சிலிண்டர், பிஎஸ் 6 டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகின்ற அல்ட்ராஸில் 4000 ஆர்.பி.எம்-மில் 90 பிஎஸ் பவர், 1250-3000 ஆர்.பி.எம்-மில் 200 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. பிஎஸ் 6 பெட்ரோல் என்ஜின் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் அதிகபட்சமாக 6000 ஆர்.பி.எம்-மில் 86 பிஎஸ் பவர் மற்றும் 3300 ஆர்.பி.எம்-மில் 113 என்எம் ஆகும்.
அல்ட்ராஸ் காரில் XE, XM, XT, XZ மற்றும் XZ (O) என ஐந்து வேரியண்டுகளும், Rhythm, Style, Luxe மற்றும் Urban என நான்கு கஸ்டமைஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. டாப் வேரியண்ட் XZ (O) மாடலுக்கு எந்தவிதமான கஸ்டமைஸ் வசதியும் வழங்கப்படவில்லை.
பொதுவாக அனைத்து வேரியண்டுகளிலும் ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார், வேக எச்சரிக்கை உடன் டிரைவிங் மோட் (சிட்டி மற்றும் ஈக்கோ) வருகிறது. இதன் முன் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அல்ட்ரோஸ் காரின் அனைத்து வேரியண்டிலும் இரட்டை முன் ஏர்பேக்குகள் மட்டுமே பெறுகிறது.
அல்ட்ராஸ் XE (பெட்ரோல் ரூ .5.29 லட்சம்; டீசல் ரூ .6.99 லட்சம்)
- சென்டரல் லாக்கிங்
- வீல் ஹப் கவர்
- 4 அங்குல எல்சிடி கிளஸ்ட்டர்
- மேனுவல் ஏசி
அல்ட்ராஸ் XE ரிதம் (ரூ.25,000)
கஸ்டமைஸ் ஆப்ஷனில் கூடுதலாக 3.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மடிக்கும் வகையிலான கீ உடன் இரட்டை ஹார்ன் மற்றும் நான்கு ஸ்பீக்கர்கள் கிடைக்கும்.
அல்ட்ராஸ் XM (பெட்ரோல் ரூ .6.15 லட்சம்; டீசல் ரூ .7.75 லட்சம்)
XE வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக
- 3.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
- 2 ஸ்பீக்கர்கள்
- தானியங்கி ஓஆர்விஎம்
- ரியர் பார்க்கிங் அசிஸ்ட்
அல்ட்ராஸ் XM ரிதம் (ரூ.39,000)
ரிதம் கஸ்டமைஸ் ஆப்ஷனில் கூடுதலாக 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் கேமரா மற்றும் நான்கு ஸ்பீக்கர்கள் கிடைக்கும்.
அல்ட்ராஸ் XM ஸ்டைல் (ரூ.34,000)
அல்ட்ராசின் ஸ்டைல் கஸ்டமைஸ் ஆப்ஷனில் கூடுதலாக 16 அங்குல ஸ்டீல் வீல், மேற்கூறை கருப்பு நிறம், முன் மற்றும் பின்புற பனி விளக்குகள், பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் வழங்கப்படும்.
அல்ட்ராஸ் XT (பெட்ரோல் ரூ .6.84 லட்சம்; டீசல் ரூ. 8.44 லட்சம்)
XM வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக
- 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
- ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ
- ஸ்டார்ட் பட்டன்
- பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள்
- ஐடியல் ஸ்டார்ட் ஸ்டாப்
- கீலெஸ் என்ட்ரி
- ஃபாலோ மீ ஹோம்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- 7.0 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்ட்டர்
அல்ட்ராஸ் XT லக்ஸ் (ரூ.39,000)
லக்ஸ் கஸ்டமைசில் 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல், மேற்கூறை கருப்பு நிறம், எக்ஸ்டீரியர் நிறத்துக்கு இணையான இன்டிரியர் மற்றும் பாடி நிறத்திலான மிரர் வழங்கப்படும்.
அல்ட்ராஸ் XZ (பெட்ரோல் ரூ .7.44 லட்சம்; டீசல் ரூ .9.04 லட்சம்)
- 16 அங்குல இரட்டை நிற அலாய் வீல்
- ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்
- ஆட்டோ ஏசி கட்டுப்பாடு
- ஆம்பியன்ட் விளக்குகள்
- ஆட்டோ ஹெட்லேம்ப்
- பின்புற ஏசி வென்ட்
- மழை உணர்திறன் வைப்பர்
- அணியக்கூடிய வகையிலான கீ
- ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள்
- முன் மற்றும் பின்புற ஆர்ம்ரெஸ்ட்
- லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் மற்றும் கியர் நாப்
அல்ட்ராஸ் XZ அர்பன் (ரூ.30,000)
கருப்பு நிற மேற்கூறை வழங்கப்படும்
அல்ட்ராஸ் XZ (O) (பெட்ரோல் ரூ .7.69 லட்சம்; டீசல் ரூ .9.29 லட்சம்)
XZ வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக கருப்பு நிற மேற்கூறை வழங்கப்படும்.
அல்ட்ராஸ் காரின் விலை ரூ.5.29 முதல் ரூ.9.29 லட்சத்தில் அமைந்துள்ளது ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். பிப்ரவரி 2020-ல் டெலிவரி வழங்கப்பட உள்ளது.