டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி மாடல் ஆன கர்வ் மற்றும் கர்வ்.ev என இரண்டு மாடல்களும் இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கு இந்த இரண்டு மாடல்களும் ஆகஸ்ட் 7ஆம் தேதி விலை அறிவிக்கப்பட இருக்கின்றது.
2023 ஆம் ஆண்டு கூபே ஸ்டைலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கான்செப்ட் நிலை மாடல் தற்பொழுது உற்பத்தி நிலையை எட்டி இருக்கின்றது.
குறிப்பாக கர்வ் மற்றும் கர்வ்.இவி என இரண்டு மாடலுக்கு மிக முக்கியமாக முக்கோண வடிவ எல்இடி ஹெட்லைட் உடன் ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளளது முன்புற தோற்ற அமைப்பு மற்றும் கிரிலில் மட்டும் வித்தியாசங்கள் பெரிதாக தெரிகின்றது. பக்கவாட்டில் ஒரே மாதிரியாக அமைந்திருந்தாலும் கூட அலாய் மற்றும் வீல் ஆர்சில் மாற்றங்கள் உள்ளன.
பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள டயர் லைட்டில் பெரிதாக மாற்றமில்லை மேலும் பம்பர் உள்ளிட்டவற்றிலும் பெரிதாக மாற்றம் இல்லாமல் இரண்டு மாடல்களும் ஒரே மாதிரி அமைந்துள்ளன.
இன்டீரியர் தொடர்பான எந்த ஒரு படங்களும் தற்பொழுது வெளியிடவில்லை மேலும் எவ்விதமான நுட்ப விபரங்களும் தற்பொழுது அறிவிக்கப்பட்ட வில்லை.
Acti-EV அடிப்படையிலான பிளாட்ஃபாரத்தின் தயாரிக்கப்படுகின்றதால் 40 முதல் 60 kWh வரையிலான பிரிவில் இரண்டு வகையான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. இந்த மாடலின் ரேஞ்ச் 450 கிமீ முதல் 600 கிமீ வரையிலான ரேஞ்ச் பெற்று 2WD & 4WD என இரு ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய 125hp பவர், 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. மேலும் நெக்ஸானிலிருந்து 115 hp, 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சினையும் பெறக்கூடும்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…