பிரசத்தி பெற்ற ஹாரியர் எஸ்யூவி காரினை அடிப்படையாக கொண்ட ஹாரியர் டார்க் எடிஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூபாய் 16 லட்சத்து 76 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ஹாரியரின் டாப் XZ வேரியண்டை அடிப்படையாக கொண்டது.
ஸ்டைலிஷான தோற்ற அமைப்பில் விளங்குகின்ற ஹாரியர் காரில் 5 இருக்கை பெற்று 2.0 லிட்டர் Kryotec டீசல் என்ஜின் கொண்டு அதிகபட்சமாக 140 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வழங்குகின்றது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டார்க் பதிப்பில் புதிய அட்லஸ் பிளாக் வெளிப்புற நிறத்தைப் பெற்று, கருப்பு நிற ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் மற்றும் சாம்பல் நிற ஹெட்லேம்ப் இன்சர்ட் மற்றும் கருமை நிற 17 அங்குல அலாய் வீல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த மாடலின் முன்பக்க ஃபெண்டரில் ‘#Dark’ என்ற வார்த்தையுடன் சிறப்பு பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்டிரியரில் பிளாக்ஸ்டோன் மேட்ரிக்ஸ் இன்ஷர்ட் உடன் கருமை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரி பெற்றதாக வந்துள்ளது.
ஹாரியர் காரில் 6 ஏர்பேக், ஏபிஎஸ் இபிடி ஆகியவற்றை பெற்று விளங்குகின்றது. ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ், எம்ஜி ஹெக்டர், ரெனோ கேப்டூர், வரவுள்ள நிசான் கிக்ஸ், மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களை எதிர்க்கும் திறனுடன் டாடா ஹேரியர் எஸ்யூவி விளங்குகின்றது.