இரு நிற கலவையில் டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

0

tata harrier suv

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாரியர் எஸ்யூவி விற்பனை எண்ணிக்கை 10,000 இலக்கை கடந்துள்ளதை முன்னிட்டு இரு நிற கலவை கொண்ட நிறத்தை பெற்ற கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Google News

கருப்பு நிற மேற்கூறை பெற்ற காலிஸ்டோ காப்பர், ஆர்கஸ் வெள்ளை என இரண்டு நிறங்களை கொண்ட ஹாரியர் நிறத்தினை தவிர எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் டாப் XZ வேரியண்ட் அடிப்படையில் வந்துள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவி விலை மற்றும் விவரம்

டாடாவின் மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பில் விளங்குகின்ற ஹாரியர் காரில் 5 இருக்கை பெற்று  2.0 லிட்டர் Kryotec டீசல் என்ஜின் கொண்டு அதிகபட்சமாக 140 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வழங்குகின்றது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

ஹாரியர் காரில் 6 ஏர்பேக், ஏபிஎஸ் இபிடி ஆகியவற்றை பெற்று விளங்குகின்றது. ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ், எம்ஜி ஹெக்டர், ரெனோ கேப்டூர், வரவுள்ள நிசான் கிக்ஸ், மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களை எதிர்க்கும் திறனுடன் டாடா ஹேரியர் எஸ்யூவி விளங்குகின்றது.

harrier suv

டாடா ஹாரியர் விலை பட்டியல்

Tata Harrier XE – ரூ. 13 லட்சம்

Tata Harrier XM – ரூ. 14.06 லட்சம்

Tata Harrier XT – ரூ. 15.26 லட்சம்

Tata Harrier XZ – ரூ. 16.55 லட்சம்

Tata Harrier XZ (DT) – ரூ. 16.75 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)