டாட்டா மோட்டார் நிறுவனம், தனது புதிய H5X காரை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. சமீபத்தில் டாட்டா ஹாரியர் கார்களுக்கான புக்கிங் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹாரியர் OTR விலை குறித்த டிவிட்டரில் க்ளு கொடுக்கப்பட்டுள்ளது.

ஹாரியர் கார்கள் 2.0 லிட்டர் கிரைப்டேக் டீசல் இன்ஜின்களுடன் வெளியாக உள்ளது. இந்த இன்ஜின்கள் 140HP ஆற்றலில் இயங்கும்., இந்த கார்களில் 6-ஸ்பீட் மெனுவல் மற்றும் 6-ஸ்பீட் ஆட்டோமேடிக் என்ற இரண்டு டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவிக்கள், லேண்ட் ரோவர் D8 பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.

டாட்டா நிறுவனம் ஹாரியர் கார்களின் விலையை வரும் 2019ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த கார்களுக்கான புக்கிக் தொடங்கப்பட்டு விட்டது. இந்த காரை 30,.000 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்து கொள்ள முடியும்.

இந்த காரை www.tataharrier.com இணைய தளத்தில் அதிகார்பூர்வமாக புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த காரின் விலை 16 லட்சம் முதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் உயர்ந்த வகை கார்கள் 21 லட்ச ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவிக்கள் ஹூண்டாய் கிரட்டா மற்றும் ஜீப் காம்பஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.