2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் புதிய பிஎஸ்6 என்ஜினை பெற்ற டாடா ஹாரியர் எஸ்யூவி மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.13.69 லட்சம் முதல் துவங்குகின்றது.
விற்பனைக்கு கிடைக்கின்ற மாடல் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற்றிருக்கின்றது. இந்த வாகனத்தின் பவர் 170 பிஹெச்பி மற்றும் டார்க் 350 என்எம் வெளிப்படுத்தும். விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட அதிகபட்சமாக ரூபாய் 45 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட உள்ளது.
டாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரில் புதிய ‘கலிப்ஸோ ரெட்’ வண்ணத்தை பெற்றிருப்பதுடன் சிறப்பான வகையில் பார்வைக்கு பெற கண்ணாடியை மாற்றி வடிவமைத்துள்ளது. பாதுகாப்பு முன்னணியில், XZ வேரியண்டில் மட்டுமே கிடைத்த எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESP) இப்போது அனைத்திலும் இணைக்கப்பட உள்ளது. மற்ற நிலையான பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ஈபிடி ஆகியவை கிடைக்கும். அதிக விலை கொண்ட டிரிம்களுடன் மேலும் நான்கு ஏர்பேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் மற்றும் டிசென்ட் கன்ட்ரோல் ஆகியவை கிடைக்கின்றன.
Tata Harrier Price list