Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் அறிமுகம்

by automobiletamilan
அக்டோபர் 27, 2017
in கார் செய்திகள்

டாடா மோட்டார்சின் புதிய எம்பிவி ரக மாடலான டாடா ஹெக்ஸா காரில் கூடுதல் வசதிகளை பெற்ற டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன்

சில மாதங்களுக்கு முன்னதாக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹெக்ஸா எம்பிவி காரில் பல்வேறு மாற்றங்களை பெற்ற புதிய ஹெக்ஸா டவுன்டவுன் பதிப்பு விபரங்களை அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ள நிலையில் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் அறிமுகம் செயப்பட உள்ளது.

எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. தற்போது பயன்பாட்டில் உள்ள ஹெக்ஸா காரில் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் 156 bhp ஆற்றலை வெளிப்படுத்தும்  2.2 லிட்டர் வேரிகார் 400 டீசல் எஞ்சின் இடம் பெற்றிருக்கும். இதன் டார்க் 400 Nm ஆகும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். 4 விதமான சூப்பர் டிரைவ் மோட்ஸ் இடம்பெற்றுள்ளது.

மேலும் வேரிகார் 320 டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 148 bhp பவரை வெளிப்படுத்தும். இதன் டார்க் 320Nm ஆகும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

டவுன்டவுன் அர்பன் மாடல்

ஹெக்ஸா காரில் கூடுதலாக புதிய பிரான்ஸ் நிற வண்ணத்தை பெற்ற இந்த வேரியன்டில் அப்சொலேட் மற்றும் இன்டல்ஜ் ( Absolute and Indulge) என இருவிதமான பேக்கேஜ் கொண்டதாக கிடைக்க உள்ளது.

இரு விதமான பேக்கேஜிலும் க்ரோம் பூச்சூ கொண்ட கிரில், ஹெட்லைட் அறை, டவுன்டவுன் பேட்ஜ், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, கார்பெட் செட், கார் கேர் கிட், 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் கருப்பு & சில்வர் கிரே  ஆகியவற்றை பெற்றுள்ளது.

XE, XM மற்றும் XMA ஆகிய வேரியன்ட்களில் பிரவுன் நிற இருக்கைகளை பெற்றுள்ளது. XT மற்றும் XTA போன்ற உயர் ரக வேரியன்ட்களில் பிளாபுங்க்ட் 10.1 அங்குல பொழுதுபோக்கோ சார்ந்த அம்சங்களை பெற்ற இரண்டு பிளேயர், ஹெட் அப் டிஸ்பிளே, ஸ்பீடு லிமிட் அலர்ட்ஸ், ஆகியவற்றை பெற்றுள்ளது.

டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் விலை விபரம் பற்றி எவ்விதமான தகவலும் வெளியிடப்படவில்லை.

Tags: Tata Hexa downtown urban editionடாடா மோட்டார்ஸ்டாடா ஹெக்ஸா
Previous Post

இந்தியாவில் சுசூகி க்ரூஸர் பைக் அறிமுக தேதி விபரம்

Next Post

ரூ. 2,484 கோடி நிகர லாபம் அடைந்த மாருதி சுசூகி – Q2, FY2018

Next Post

ரூ. 2,484 கோடி நிகர லாபம் அடைந்த மாருதி சுசூகி - Q2, FY2018

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version