Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டாடாவின் நெக்ஸான் டார்க் எடிசனின் முக்கிய விபரங்கள்

by நிவின் கார்த்தி
21 February 2024, 10:11 am
in Car News
0
ShareTweetSend

tata nexon ev dark

டாடா மோட்டார்சின் விற்பனையில் டார்க் எடிசன் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் புதிய நெக்ஸான் அடிப்படையில் டார்க் எடிசன் விற்பனைக்கு நாம் அடுத்த சில வாரங்களுக்குள் எதிர்பார்க்கும் நிலையில் சிறப்பு டார்க் எடிசனை பற்றி முழுமையாக தற்பொழுது வரை கிடைத்துள்ள தகவல்களை முழுமையாக தொகுத்து அளித்துள்ளேன்.

நெக்சானின் எலக்ட்ரிக் டார்க் எடிசன் பாரத் மொபைலிட்டி கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த எஸ்யூவி மாடலில் பெட்ரோல், டீசல், எலக்ட்ரிக் என மூன்று விதமாக கிடைக்கின்ற நிலையில் சிஎன்ஜி மாடலும் வரவுள்ளதாக இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

நெக்ஸான் டார்க் எடிசன் பற்றி முக்கிய குறிப்புகள்:

  • 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெற உள்ள டார்க் எடிசனின் பவர் 120hp பெறுகின்ற மாடலில் மேனுவல், ஏஎம்டி மற்றும் டாப் DCA கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரவுள்ளது.
  •  1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 115hp குதிரைத்திறன் வெளிப்படுத்துகின்ற மாடலில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெறலாம்.
  • Creative, Creative+, Creative+ S, Fearless, Fearless S மற்றும் Fearless+ S ஆகிய 6 வேரியண்டுகளில் மட்டும் இந்த சிறப்பு எடிசன் கிடைக்க உள்ளது. S என குறிப்பிடுது சன்ரூஃப் உள்ள மாடலாகும்.
  • முழுமையாக அட்லஸ் கருப்பு என அழைக்கப்படுகின்ற கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட டார்க் எடிசனில் டார்க் பேட்ஜ் பெற்று பம்பர், கிரில், அலாய் வீல், மற்றும் கருப்பு நிற டாடா லோகோவினை கொண்டிருக்கின்றது.
  • இன்டிரியரில் முழுமையாக கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட டேஸ்போர்டு, அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் இருக்கைகள்
  • டாப் வேரியண்டுகளில் இடம்பெற உள்ள முக்கிய வசதிகளில் 360 டிகிரி கேமரா, கனெக்ட்டிவிட்டி வசதிகள், வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் என பலவற்றை பெற உள்ளது.

 

சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற நெக்ஸான் 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள போட்டியாளர்களில் முதன்மையாக விளங்கும் நிலையில் டார்க் எடிசன் கூடுதல் வலுசேர்க்கும் என கருதுகின்றோம். மார்ச் மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், எலக்ட்ரிக் மாடல் சற்று தாமதமாக விற்பனைக்கு வரக்கூடும்.

2024 டாடா நெக்ஸான் விலை ரூ. 9.80 லட்சம் முதல் ரூ.19.41 லட்சம் வரை (ஆன்ரோடு, சென்னை) தற்பொழுது மொத்தமாக 73 வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

Related Motor News

18 % ஜிஎஸ்டி வரியால் ஸ்பிளெண்டர்+, ஆக்டிவா, ஜூபிடர், ஆல்டோ, நெக்ஸான் விலை எவ்வளவு குறையும்.?

ஏப்ரல் 1 முதல் டாடா கார்களின் விலை 3 % வரை உயருகின்றது

2025 டாடா நெக்ஸான் சிஎன்ஜி டார்க் எடிசன் விற்பனைக்கு வெளியானது.!

கார் முதல் உப்பு வரை டாடா குழுமத்தின் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா

ரூ.8.99 லட்சத்தில் டாடா நெக்ஸான் டர்போ சிஎன்ஜி விற்பனைக்கு வெளியானது

2024 டாடா பஞ்ச் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

Tags: TataTata Nexon
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 hyundai i20 knight edition

2025 ஹூண்டாய் i20, i20 N-line நைட் எடிசன் வெளியானது

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் நுட்பங்கள் மற்றும் வசதிகளின் விபரம் வெளியானது

க்ரெட்டா எலக்ட்ரிக் ரேஞ்ச் அதிகரித்த ஹூண்டாய் மோட்டார்

ADAS உடன் மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி அறிமுகமானது

BNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ்

ADAS பாதுகாப்புடன் டாடா நெக்ஸான்.இவி விற்பனைக்கு அறிமுகமா.?

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

2025 ஹோண்டா எலிவேட்டில் இன்டீரியர் மேம்பாடு மற்றும் கூடுதல் வசதிகள்

செப்டம்பர் 3ல் மாருதியின் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan