இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் கார் மாடலாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் EV விற்பனை எண்ணிக்கை 50,000 தாண்டியுள்ளது. மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற எலக்ட்ரிக் காராக ரூ. 14.99 லட்சம் முதல் ரூ. 19.54 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி பிரைம் மற்றும் மேக்ஸ் என இரண்டு விதமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Tata Nexon EV
நெக்ஸான் EV மேக்ஸ் காரின் பவர் 141bhp மற்றும் 250Nm டார்க் வழங்குகின்ற மின்சார மோட்டாருக்கு 40.5kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 453 கிமீ பயணிக்கலாம்.
அடுத்து, பிரைம் நெக்ஸான் இவி , பவர் 127 HP மற்றும் 245 Nm வழங்குகின்ற மின்சார மோட்டாருக்கு 30.2kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 312 கிமீ பயணிக்கலாம்.
டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் சேவை பிரிவு தலைவர் திரு.விவேக் ஸ்ரீவத்சா கூறுகையில்,
“நெக்ஸான் EV ஆனது, இந்தியாவில் விரைவான எலக்ட்ரிக் வாகனமாக விற்பனை ஆகி வருகின்றது. ஸ்டைலான, நடைமுறை மற்றும் நிஜ உலக தீர்வை வழங்கும் நோக்கத்துடன் இந்தியாவின் சொந்த மின்சார எஸ்யூவி மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
நெக்ஸான் EV வெறும் 3 ஆண்டுகளில் 50,000 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. தற்போதைய காலத்தின் இயக்கமாக மின்சார வாகனங்களை இந்தியா எவ்வாறு ஏற்றுக்கொண்டது என்பதற்கு இது ஒரு சான்று. அதிகமான மக்கள் EVகளின் வாக்குறுதியை அனுபவித்து மின்சாரமாக மாறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.