டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ள புதிய நெக்ஸான் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் மைலேஜ் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
நெக்ஸான் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரண்டு விதமாக கிடைக்கின்றது.
நெக்ஸான் எஸ்யூவி காரில் அதிகபட்சமாக 120hp பவரையும், 170Nm டார்க் வழங்கும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தற்பொழுது 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு AMT மற்றும் 7- வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் (க்விக் ஷிஃப்டர்) என 4 கியர்பாக்ஸ்களில் கிடைக்கிறது.
அடுத்தப்படியாக, 115hp பவர் மற்றும் 160Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆனது, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT உடன் வழங்கப்பட்டுள்ளது.
Engine | Transmission | Fuel efficiency figures |
1.2-litre turbo petrol engine | Five-speed/six-speed manual gearbox | 17.44kmpl |
1.2-litre turbo petrol engine | Six-speed AMT unit | 17.18kmpl |
1.2-litre turbo petrol engine | Seven-speed DCT unit | 17.01kmpl |
1.5-litre diesel engine | Six-speed manual gearbox | 23.23kmpl |
1.5-litre diesel engine | Six-speed AMT unit | 24.08kmpl |
புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் விலை ரூபாய் 8.10 லட்சம் முதல் ரூ. 15.50 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்கிறது.
This post was last modified on September 20, 2023 2:13 PM