டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐகானிக் பிராண்டு சஃபாரி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ரூ.30,000 கட்டணமாக செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். விலை விபரம் பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

2.0 லிட்டர் கிரையோடெக் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி பவர், 350 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கின்ற எஸ்யூவி காருக்கான டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6 வேக மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்துள்ளது.

OMEGARC பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட ஹாரியர் எஸ்யூவியின், அதே பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சஃபாரியில் இந்நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 வடிவ தாத்பரியத்தை கொண்டதாக அமைந்துள்ளது.

சஃபாரியில் XE, XM, XT, XT+, XZ, மற்றும் XZ+ என ஆறு விதமான வேரியண்டை கொண்டுள்ள நிலையில், XM, XZ, மற்றும் XZ+ வேரியணடுகளில் மட்டும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.